Published : 08 Dec 2022 05:50 AM
Last Updated : 08 Dec 2022 05:50 AM
சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கான விண்ணப்பப் படிவங்கள் பெறும் பணி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தாண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் கடந்த நவ. 9-ம் தேதி தொடங்கியது. அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. குறிப்பாக, அலுவலக நாட்களில் வாக்குச் சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவிவாக்காளர் பதிவு அதிகாரிகளிடம் உரிய படிவங்களை அளிக்கலாம்.
படிவம் அளிப்பது தவிர, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. www.nvsp.in, https://voterportal.eci.gov.in ஆகிய இணையதள முகவரி மற்றும் “VOTER HELP LINE"கைபேசி செயலி மூலமும் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதுதவிர, தமிழகம் முழுவதும் உள்ள 69 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் கடந்த நவ.12,13மற்றும் 26, 27 ஆகிய நான்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், இன்று டிச.8-ம் தேதியுடன் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி முடிவடைகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவிரும்புவோர், 17 வயது நிறைவடைந்திருந்தாலே இன்று அதற்கான படிவம் 6ஐ பெற்றுவிண்ணப்பிக்கலாம். அல்லது இணையதளம்மூலம் விண்ணப்பிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment