Published : 08 Dec 2022 07:07 AM
Last Updated : 08 Dec 2022 07:07 AM

ஐஏஎஸ் மாதிரி ஆளுமை தேர்வில் பங்கேற்க முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அழைப்பு

சென்னை: தமிழக தலைமைச் செயலர் வெ.இறையன்பு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசால் சென்னையில் நடத்தப்பட்டு வரும் அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வுப் பயிற்சி மையத்தில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும். அகில இந்திய குடிமைப் பணிகளில் அடங்கிய முதல்நிலை, முதன்மைத் தேர்வுகளை எதிர்கொள்ளும் தேர்வர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு நிகழாண்டு முதன்மைத் தேர்வுக்கு பயின்ற 76 பேரில், 15 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 18 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் ஒரு மாற்றுத் திறனாளி பெண்ணும் அடக்கம். மேலும் இருவர் தமிழை விருப்பப் பாடமாக தேர்வு செய்து தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இப்பயிற்சி மையத்தின் மூலம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்படவுள்ளது. பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி உள்ளிட்டோரால் நடத்தப்படும் இத்தேர்வில் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிற தேர்வர்களும் பங்கு பெற அனுமதிக்கப்படுவர். இதற்கென கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை. அவ்வாறு பங்கு பெற விரும்பும் தேர்வர்கள், தங்களது விருப்பத்தை, aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 94442 86657 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அல்லது 044 2462 1909 என்ற தொலைபேசி எண்ணுக்கோ தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். மாதிரி ஆளுமைத் தேர்வு தேதி விரைவில் www.civilservice coaching.com என்ற இணையதளத்தில் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x