Published : 07 Dec 2022 11:19 AM
Last Updated : 07 Dec 2022 11:19 AM
சென்னை: அதிமுகவில் இருந்ததற்கு மக்களிடம் பாவ மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று திமுகவில் இணைந்த கோவை செல்வராஜ் தெரிவித்தார்.
அதிமுகவின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக இருந்த முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ், அதிமுக கட்சி பிரிந்தபோது ஓபிஎஸ் அணியில் இருந்தார். இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ் அணியில் இருந்து விலகினார். இதன்பிறகு இன்று (நவ.7) காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இதனைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் அவர் அளித்த பேட்டியில்,"நான்கரை ஆண்டு ஈபிஎஸ் ஆட்சியில் தமிழகம் சீரழிந்துவிட்டது. அதிமுக கட்சி தற்போது கம்பெனியாகி விட்டது. அதிமுகவில் இருந்ததற்கு மக்களிடம் பாவ மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 14 வயதில் உதயசூரியன் சின்னத்தில் வாக்குக் கேட்ட நான் மீண்டும் தாய்க்கழகத்தில் இணைந்துள்ளேன்.தமிழக மக்கள் நலன் கருதி திமுகவில் இணைந்துள்ளேன். இலவச மின்சாரம் மூலம் விவசாயிகள் வாழ்வில் முதல்வர் ஒளியேற்றி வைத்துள்ளார். சமூக நீதி பாதுகாவலர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் செயல்பட வந்துள்ளேன்" இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT