Published : 16 Dec 2016 10:04 AM
Last Updated : 16 Dec 2016 10:04 AM
தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி சர்வதேச விமான நிலையங்களில் கார்கோ சேவை (சரக்கு முனையம்) இருக்கிறது. மதுரை விமான நிலையத்தில் இருந்து கொழும்பு, துபாய்க்கு சர்வதேச அளவில் பயணிகள் விமானப் போக்குவரத்து இருக்கி றது. கார்கோ சேவை மதுரையில் இதுவரை இல்லை.
ஏர் டைகர், ஏர் அரேபியா, ஏர் ஏசியா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் சிங்கப்பூர், ஷார்ஜா, அபுதாபி, குவைத், மலேசியா உள்ளிட்ட வெளிநாடு களுக்கு மதுரையில் இருந்து பயணிகள் விமானம், சரக்கு விமானங்கள் இயக்க தயா ராக இருந்தும் இரு நாட்டு விமான சேவை ஒப்பந்தத்தில் மதுரை விமான நிலையம் சேர்க்கப்படாத தால் மதுரை முழுமையான சர்வ தேச விமான நிலையம் ஆவதில் சிக்கல் நீடிக்கிறது.
கடந்தற 2013-ம் ஆண்டு மதுரையில் இருந்து வெளிநாடு களுக்கு நேரடியாக சரக்குகளை ஏற்றுமதி செய்யவும், அங்கிருந்து இறக்குமதி செய்யவும் மத்திய அரசு அனுமதி வழங்கி அதற்கான அறிவிக்கையை வெளி யிட்டது. ஆனால், சரக்கு விமான போக்குவரத்து முனையத்துக்கான குளிர்பதன நிலையம் மற்றும் மத்திய கலால் மற்றும் சுங்க வரித்துறை ஒப்புதல் கிடைக்காத தால் தற்போது வரை மதுரை விமான நிலையத்தில் சரக்கு போக்குவரத்து முனையம் அமைவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு நேரடியாக சரக்குகளை ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்கு மத்திய கலால் மற்றும் சுங்க வரித் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுகுறித்து மதுரை விமான நிலைய இயக்குநர் வி.வி.ராவ் கூறியதாவது:
மதுரை விமான நிலைய ஒடுதளம் தற்போது 8 ஆயிரம் அடியாக உள்ளது. இதை 12 ஆயிரம் அடியாக விரிவுபடுத்த மத்திய விமான போக்குவரத்துத் துறை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக 610 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அடையாளம் காணப்பட்டுள்ளது. விரைவில் இந்த நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கப்படும். மதுரை விமான நிலையத்தில் சரக்கு விமானப் போக்குவரத்து செயல்பாடுகள் தொடங்க சரக்கு களை பொறுப்பேற்கும் அதிகாரத் துக்கான ஒப்புதல் சான்றிதழை மத்திய காலால் மற்றும் சுங்க வரி இணை ஆணையர் பைடி ராமபிரசாத் வழங்கியுள்ளார். அதனால், வரும் ஏப்ரல் மாதம் முதல் மதுரை விமான நிலையத் தில் இருந்து நேரடியாக சர்வதேச நாடுகளுக்கு சரக்குகளை ஏற்று மதி செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றார்.
தொழில் வளர்ச்சி
தமிழ்நாடு தொழில் வர்த்த சங்க தலைவர் என்.ஜெகதீசன், முதுநிலை தலைவர் எஸ்.ரத்தின வேலு ஆகியோர் கூறும்போது, “இனி, மதுரை விமான நிலையத்தில் இருந்து ஏற்றுமதி கூடுதலாக வாய்ப்பு உள்ளதால் தொழில், பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பில் பின்தங்கிய தென் தமிழகம் ஏற்றம் பெற வாய்ப்பு உள்ளது. இதனால், படித்த இளைஞர்கள் வேளாண் துறைக்கு வரவும் கிரானைட் தொழில் வளர்ச்சி பெறவும் இது வழிவகுக்கும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT