Published : 05 Dec 2022 06:57 PM
Last Updated : 05 Dec 2022 06:57 PM
சென்னை: தமிழகத்தில் இன்று (டிச.5) வரை 60.27 லட்சம் மின் இணைப்புகள், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
மின் இணைப்பு எண்ணினை ஆதாருடன் இணைக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்து இருந்தார். இதன்படி தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கீழ் உள்ள 2,811 பிரிவு அலுவலகங்களில் தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 7 நாட்களாக சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 60.27 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், இன்று 2,811 பிரிவு அலுவலக சிறப்பு முகாம்கள் மூலம் 3.64 லட்சம் இணைப்புகளும், ஆன்லைனில் 2.08 லட்சம் இணைப்புகளும் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. இன்று வரை மொத்தம் 60.27 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப் பட்டிருக்கின்றன" என்று கூறியுள்ளார்.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், இன்று 2,811 பிரிவு அலுவல சிறப்பு முகாம்கள் மூலம் 3.64 லட்சம் இணைப்புகளும், ஆன்லைனில் 2.08 லட்சம் இணைப்புகளும் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கின்றன.
இன்று வரை மொத்தம் 60.27 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப் பட்டிருக்கின்றன.— V.Senthilbalaji (@V_Senthilbalaji) December 5, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT