Published : 05 Dec 2022 05:34 PM
Last Updated : 05 Dec 2022 05:34 PM
மதுரை: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் இருந்து திருவண்ணாமலைக்கு நேரடி ரயில் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுரை - விழுப்புரம் - மதுரை விரைவு ரயில்களின் சேவை நாளையும் (டிச.6) நாளை மறுதினமும் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படுகிறது. மதுரை - விழுப்புரம் விரைவு ரயில் (16868) மதுரையிலிருந்து அதிகாலை 4.05 மணிக்கு புறப்பட்டு விழுப்புரத்திற்கு வழக்கமாக காலை 11.15 மணிக்கு சென்றடைகிறது. பின்னர் விழுப்புரத்திலிருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.05 மணிக்கு திருவண்ணாமலை சென்று சேரும்.
மறு மார்க்கத்தில் திருவண்ணாமலையில் இருந்து மதுரை விரைவு ரயில் (16867) மாலை 3 மணிக்கு புறப்பட்டு மாலை 4.25 மணிக்கு விழுப்புரம் வருகிறது. விழுப்புரத்திலிருந்து வழக்கமாக புறப்படும் நேரமான மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு மதுரை வந்தடைகிறது. நீட்டிக்கப்பட்ட சேவை ரயில் விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே திருக்கோவிலூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT