Published : 03 Dec 2022 10:24 PM
Last Updated : 03 Dec 2022 10:24 PM
சென்னை: தமிழக பாஜகவின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவராக இசை அமைப்பாளர் தீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, இந்தப் பதவியை காயத்ரி ரகுராம் வகித்திருந்தார்.
பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி சரணை, திருச்சி சூர்யா சிவா ஆபாசமாக பேசிய ஆடியோ விவகாரத்தில் காயத்ரி ரகுராம் கடுமையாக எதிர்வினை ஆற்றியிருந்தார். இதையடுத்து வர் காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக கூறி பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் 6 மாத காலத்துக்கு நீக்கி அண்ணாமலை உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் தான், காயத்ரி ரகுராம் வகித்த அந்த பொறுப்புக்கு இசையமைப்பாளர் தீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இதன் துணை தலைவராக ஆனந்த் மெய்யாசாமி என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT