Last Updated : 15 Dec, 2016 08:35 AM

 

Published : 15 Dec 2016 08:35 AM
Last Updated : 15 Dec 2016 08:35 AM

‘வார்தா’ புயலின்போது தடையின்றி சேவை வழங்கிய பிஎஸ்என்எல்

‘வார்தா’ புயலின் தாக்கத்தால் அனைத்து தனியார் தொலைபேசி நிறுவனங்களின் சேவைகளும் செயலிழந்த நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும் தடையின்றி தனது தொலைபேசி சேவையை வழங்கியது.

கடந்த திங்கள்கிழமை வீசிய ‘வார்தா’ புயல் சென்னை மக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தகவல் தொடர்பு சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவசரத் தேவைக்குக் கூட பிறரை தொடர்புகொள்ள முடியவில்லை. காரணம் எந்த தனியார் தொலைத் தொடர்பு சேவையும் செயல்பட வில்லை. அதே சமயம் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சேவை மட்டும் எவ்வித தடங்கலும் இன்றி கிடைத்தது.

உலகிலேயே தங்களுடைய தகவல் தொடர்பு சேவைதான் நம்பர் ஒன் என விளம்பரம் செய்த நிறுவனங்கள் எல்லாம் கடந்த 3 நாட்களாக எங்கே சென்றுவிட்டன என தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதே சமயம், பிஎஸ்என்எல் நிறுவனத்தால் மட்டும் எவ்வாறு தடங்கலின்றி தொலைத் தொடர்பு சேவை வழங்க முடிந்தது என்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி யுள்ளது.

இதுகுறித்து, சென்னை தொலைபேசி வட்டத்தின் தலைமை பொதுமேலாளர் எஸ்.எம்.கலாவதி ‘தி இந்து’விடம் கூறியதாவது:

சென்னையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சார்பில் 6 லட்சத்து 80 ஆயிரம் தரைவழி தொலைபேசி இணைப்புகளும், 15 லட்சம் செல் போன் இணைப்புகளும் உள்ளன. செல்போன் சேவையை வழங்கு வதற்காக 2 ஆயிரத்து 900 டவர்கள் நிறுவப்பட்டுள்ளன. நாங்கள் ஆண்டுதோறும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக எங்க ளுடைய நெட்வொர்க் இணைப்பு களை முறையாக ஆய்வு செய்து பராமரிப்போம். கடந்த ஆண்டு சென்னையில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போதும் அனைத்து தனியார் தொலைபேசி நிறுவனங் களின் சேவையும் செயலிழந்த போது பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும்தான் செயல்பட்டது.

அதேபோல், இந்த ஆண்டு ‘வார்தா’ புயல் சென்னையைத் தாக்கும் என அறிந்ததும் முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து செல்போன் டவர்களும் தடங்களின்றி செயல்படுவதற்காக 2 ஜெனரேட்டர்கள் மற்றும் ஒரு பேட்டரியை தயார் நிலையில் வைத் திருந்தோம். அதேபோல், ஜென ரேட்டர்களை இயக்குவதற்கு 3 நாட் களுக்குத் தேவையான டீசலை வாங்கி இருப்பு வைத்தோம்.

அத்துடன், 108 ஆம்புலன்ஸ் சேவை, தீயணைப்புத் துறை, காவல் துறை, பேரிடர் மேலாண்மை உதவி மையங்கள் உள்ளிட்ட அத்தியா வசியத் துறைகளில் தொலைபேசி சேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அங்கு கூடுதல் ஊழியர்களை நியமித்து தொடர் கண்காணிப்பில் ஈடுபடுத்தி னோம்.

தரைவழி தொலைபேசி இணைப் புகளுக்காக தரமான ஆப்டிக் ஃபைபர் கேபிள்களை பயன்படுத்தி வருகிறோம். இதனால் இச்சேவை யில் பாதிப்பு ஏற்படவில்லை. செல்போன் டவர்களில் சிக்னல் குறைபாடு ஏதேனும் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்வதற்காக தகுந்த கருவிகளுடன் அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்தோம். அத்துடன் எங்கள் நிறுவனத்தில் அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் இருப்பதாலும், அவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் தங்கள் பணியை செய்ததாலும் கடந்த 3 நாட்களாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நெட்வொர்க் சேவை யில் எவ்வித பாதிப்பும் ஏற்பட வில்லை. எங்களுடைய இச்சேவை யைக் கண்டு எங்களை விட்டு விலகிச் சென்ற வாடிக்கையாளர்கள் மீண்டும் எங்கள் நெட்வொர்க்கை விரும்பி வரும் நிலை ஏற்பட் டுள்ளது.

இவ்வாறு கலாவதி கூறினார்.

தனியார் நெட்வொர்க் நிறுவனத் தின் மேலாளர் ஒருவர் கூறும் போது, “தனியார் தொலைபேசி நிறுவனங்கள் தங்களுடைய வியா பாரத்தை லாப நோக்கில் பெருக்கு வதற்கான வழிமுறையைத்தான் செய்கின்றனவே தவிர அதற்கான கட்டமைப்பு வசதிகளை செய் வதில்லை. ஒரே செல்போன் டவரை அனைத்து நிறுவனங்களும் பயன்படுத்தி வருகின்றன. இந்த செல்போன் டவர்களை ‘அவுட்சோர் சிங்’ முறையில் நிறுவனங்கள் பராமரித்து வருகின்றன. இதனால் ஒரு டவர் செயலிழந்தாலும் அனைத்து நிறுவனங்களின் நெட்வொர்க் சேவையும் பாதிப்படைகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x