Published : 31 Dec 2016 09:28 AM
Last Updated : 31 Dec 2016 09:28 AM
தேசிய கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தால் (என்.சி.இ.ஆர்.டி) நடத்தப்பட்ட, பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் விழிப்புணர்வு மற்றும் திறனறித் தேர்வில் தமிழ் வழியில் படித்து தமிழிலேயே தேர்வு எழுதிய 20 சதவீதம் பேர் தேர்வாகி உள்ளனர்.
6 முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்கள் மத்தியில் அறிவியல் ஆராய்ச்சி மனப்பான்மையை ஊக்குவிப்பதற்காக தேசிய அளவில் அறிவியல் விழிப்புணர்வு மற்றும் திறனறித் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இதில் முதல் கட்டமாக ஒரு வகுப்புக்கு 20 பேர் வீதம் ஒவ்வொரு மாநிலத்திலும் 120 பேர் தேர்வு செய்யப்படுவர். இதன்படி கடந்த நவம்பர் 20-ம் தேதி நடத்தப்பட்ட முதல் கட்ட தேர்வை இந்திய அளவில் சுமார் 98 ஆயிரம் பேரும் தமிழக அளவில் சுமார் 9,500 பேரும் எழுதினர். தற்போது இந்தத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.
இதில் தேர்வாகி இருக்கும் 120 பேரில் 60 பேர் சென்னை மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். இந்தத் தேர்வை பள்ளிகள் மூலம் அல்லாது தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்து எழுதியவர்கள் 800 பேர். இவர்களில் நாற்பது பேர் தேர்வாகி உள்ளனர். தமிழ் வழியில் கற்று தமிழிலேயே தேர்வை எழுதியவர்களில் 25 பேர் தேர்வாகியுள்ளனர். இது மொத்தத் தேர்ச்சியில் சுமார் 20 சதவீதமாகும்

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்தகட்ட செய்முறை தேர்வுகள் ஜனவரி 7, 8 தேதிகளில் ஈரோட்டில் நடக்கின்றன. இதுகுறித்து ’தி இந்து’விடம் பேசிய இந்தத் தேர்வுகளுக்கான தமிழக ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் கண்ணபிரான், “செய்முறை தேர்வுகள் 120 மாணவருக்கும் தனித்தனியாக நடத்தப்பட்டு அவர்களில் இருந்து 18 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு ரொக்கப் பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்படும். அந்த 18 பேரில் ஒவ்வொரு வகுப்புக்கும் முதல் இரண்டு இடங்களை பிடித்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த 12 பேரும் அடுத்தகட்டமாக தேசிய அளவில் டெல்லியில் நடத்தப்படும் திறனறி பயிற்சி முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுவர்’’ என்று சொன்னார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT