Published : 30 Nov 2022 06:52 PM
Last Updated : 30 Nov 2022 06:52 PM
சென்னை: தமிழகத்தில் மின் இணைப்புதாரர்கள் மின் இணைப்பு எண்ணை அவர்களது ஆதாருடன் இணைக்கும் பணியானது மத்திய அரசின் உரிய ஒப்புதல் பெற்று தமிழகம் எங்கும் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. மின் இணைப்பு எண்ணினை ஆதாருடன் இணைக்க சிறப்பு முகாம்கள், இம்மாதம் 28-ம் தேதி முதல் முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை நடைபெறும் என்றும் தமிழக மின்சாரத் துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில், இணையம் வழியே ஆதார் - மின் இணைப்பு எண்ணை எவ்வாறு இணைக்கலாம் என்பதை காணலாம்.
> தமிழக மின்சார துறையின் கீழ் இயங்கும் மின் நுகர்வோர் (TNEB)-இன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு https://nsc.tnebltd.gov.in/adharupload/ முதலில் செல்ல வேண்டும் .
> பின்னர் அப்பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள உங்கள் மின் இணைப்பு எண்ணை அதில் பதிவுச் செய்து ஓகே (OK) என்ற க்ளிக்கை அழுத்த வேண்டும்.
> அதன்பிறகு ஓடிபி மூலம் உங்கள் செல்போன் எண்ணை உறுதிச் செய்ய வேண்டும்.
> ஓடிபி-ஐ பதிவு செய்த பிறகு வரும், ஆதார் - மின் எண் இணைப்பு பக்கத்தில் வாடகைக்கு குடியிருப்போர், உரிமையாளர் என இரண்டு ஆப்ஷன்கள் உங்களுக்கு காண்பிக்கும், அதில் உங்களுக்கான ஆப்ஷனை நீங்கள் தேர்வு செய்துகொள்ள வேண்டும்.
> பின்னர் உங்கள் மின் இணைப்பு கணக்கில் கேட்கப்பட்டுள்ள உங்கள் ஆதார் எண்னை பதிவிட வேண்டும். அதன்பின், ஆதாரில் உள்ள உங்கள் பெயரை பதிவிட செய்ய வேண்டும். இந்தத் தகவல்களை எல்லாம் நிரப்பிவிட்ட பிறகு, நான் ஒப்புக் கொள்கிறேன் (I Agree) என்பதை க்ளிக்கை அழுத்த வேண்டும். இதன் மூலம் உங்கள் ஆதார் எண்ணுடன் - மின் இணைப்பு எண் இணைந்துவிடும்.
> இந்தப் பக்கத்தை பூர்த்தி செய்த பிறகு, தேவைக்காகவும், சான்றுக்காகவும் நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT