Published : 10 Dec 2016 09:51 AM
Last Updated : 10 Dec 2016 09:51 AM

நவம்பர் 10-ம் தேதியில் இருந்து டிசம்பர் 5-ம் தேதி வரை புதிதாக ரூ.3.81 லட்சம் கோடியை விடுவித்துள்ளது ரிசர்வ் வங்கி

பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப் பட்ட பிறகு, நவம்பர் 10-ம் தேதியில் இருந்து டிசம்பர் 5-ம் தேதி வரை ரூ.3.81 லட்சம் கோடிக்கான ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி புதிதாக புழக்கத்தில் விட்டுள்ளது.

500, 1000 ரூபாய் நோட்டுகள் பண மதிப்பு நீக்கமானது ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல், பிரதமர் மோடி இவர்களின் தன்னிச்சை நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், கடந்த 7-ம் தேதி, ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் ஆர்.காந்தி வெளியிட்ட அறிக்கையில், ‘‘ரிசர்வ் வங்கி யால் பாதுகாப்பு அம்சங்களுடன் நவீன முறையில் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளைப்போலவே போலி நோட்டு களும் ஏராளமாக புழக்கத்தில் இருந்தன. மேலும் வரி கட்டப்படாத கறுப்புப் பணமும் ரொக்கமாக நாடு முழுவதும் பதுக்கப்பட்டிருந்தன.

இவை அனைத்தையும் ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் ஒன்றுக்கு பலமுறை கலந்தாலோசித்துதான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பான நடவடிக்கைகள் ரகசியமாக வைக்கப்பட்டாலும், இதனால் ஏற்படப் போகும் உடனடி பாதிப்புகளும் சங்கடங் களும் ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் நன்றாகவே தெரியும்.

இந்த சங்கடங்கள் தவிர்க்க முடியாதது என்றபோதும் முடிந்தவரை சிரமங்களை குறைக்கவும் அவற்றில் இருந்து விடுபட வும் சில முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, சாதாரண மக்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதை மனதில் வைத்தே அந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன’’ என்று விளக்கம் அளித்துள்ளார்.

இதனிடையே, ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் மையங் களில் இருந்து அவற்றின் முழு உற்பத்தித் திறனையும் பயன்படுத்தி ரூபாய் நோட்டு கள் அச்சடிக்கப்பட்டு வருவதாகவும் ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், நவம்பர் 10-ம் தேதியில் இருந்து டிசம்பர் 5-ம் தேதி வரை 1,910 கோடி எண்ணிக்கையிலான ரூபாய் நோட்டுகளை புதிதாக புழக்கத்துக்கு விடுவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி.

இதில் 850 கோடிக்கு ரூ.100 நோட்டுகள், 180 கோடிக்கு ரூ.50 நோட்டுகள், 310 கோடிக்கு ரூ.20 நோட்டுகள், 570 கோடிக்கு ரூ.10 நோட்டுகள் ஆகும். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.3.81 லட்சம் கோடி.

இந்தியா முழுவதும் உள்ள ரிசர்வ் வங்கியின் 4,075 கரன்ஸி பெட்டக மையங்களில் ஏற்கெனவே இருப்பில் இருந்த புதிய நோட்டுகளும், தற்போது புதிதாக அச்சடிக்கப்பட்ட நோட்டுகளும் இதில் அடக்கம். இப் போது விடுவிக்கப்பட்டிருக்கும் ரூபாய் நோட்டுகளின் மதிப்பானது கடந்த 3 ஆண்டுகளில் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட மொத்த ரூபாய் மதிப்பைவிட அதிகம் என்பது குறிப் பிடத்தக்கது.

இப்போது விடுவிக்கப்பட்டிருக்கும் ரூபாய் நோட்டுகளின் மதிப்பானது கடந்த 3 ஆண்டுகளில் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட மொத்த ரூபாய் மதிப்பைவிட அதிகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x