Published : 29 Nov 2022 04:20 AM
Last Updated : 29 Nov 2022 04:20 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், இளையான் குடி அருகே 460 ஏக்கர் நெற்பயிரை காப்பாற்ற தினமும் ரூ.25,000 செலவழித்து விவசாயிகள் கண் மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்கின்றனர்.
இளையான்குடி அருகே மருதங்கநல்லூரில் 460 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் போதிய மழை இல்லாததால் நெற் பயிர்கள் கருகி வந்தன. இதனால் வேதனை அடைந்த விவசாயிகள், தண்ணீரை விலைக்கு வாங்கியாவது நெற் பயிரை காப்பாற்ற முடிவு செய்தனர்.
இதையடுத்து அருகேயுள்ள எஸ்.காரைக்குடி கிராமத்தில் 9 தனியார் பம்புசெட் மோட்டார் களில் இருந்து தண்ணீரை விலைக்கு வாங்கியுள்ளனர். மேலும் அவற்றை கால்வாய் மூலம் மருதங்கநல்லூர் கண்மாய்க்கு கொண்டு செல்கின்றனர். இந்த தண்ணீரை கொண்டு செல்ல இரவு, பகலாக ஷிப்டு முறையில் விவசாயிகள் பாடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மருதங்கநல்லூர் விவசாயி உலகநாதன் கூறிய தாவது: எங்கள் கண்மாயில் தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகி வருகின்றன. மூன்று முறை தண்ணீர் பாய்ச்சினாலே விளைந்து விடும். இதனால் நெற்பயிரைக் காப்பாற்ற முடிவு செய்து, ஒவ் வொரு விவசாயியிடமும் பணம் வசூலித்து, தண்ணீரை விலைக்கு வாங்கி கண்மாய்க்கு கொண்டு செல்கிறோம்.
தண்ணீரை ஒரு மணி நேரத்துக்கு ரூ.100 வீதம் வாங்குகிறோம். இதர செலவு உட்பட தினமும் ரூ.25,000 வரை செலவாகிறது. கண்மாய்க்கு செல்லும் தண்ணீரை முறை வைத்து பயன்படுத்துகிறோம். இதனால் எங்களுக்கு நஷ்டம் என்றாலும் நெற்பயிரை காப்பாற்றிய திருப்தி கிடைக்கும்.
எங்களின் கஷ்டத்தை அதிகா ரிகள் புரிந்து கொண்டு, உப்பாற்றில் இருந்து எங்கள் கண்மாய்க்கு தண்ணீர் வருவதற்காக அமைக் கப்பட்ட சுப்பன் கால்வாய் திட் டத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT