Published : 28 Dec 2016 10:58 AM
Last Updated : 28 Dec 2016 10:58 AM
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை யின்றி வெயில் அடித்து வருவதால் உப்பு உற்பத்தி முன்கூட்டியே தொடங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையா புரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இவற்றில் 30 ஆயிரம் தொழி லாளர்கள் வேலை செய்கின்றனர்.
25 லட்சம் டன் உற்பத்தி
ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய் யப்படுகிறது. நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத் துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி உள்ளது. மழை மற்றும் பனிக் காலம் முடிந்த பின், பிப்ரவரி மாதம்தான் உப்பு உற்பத்திக்கான ஆரம்பக்கட்டப் பணிகள் இங்கு தொடங்கும். ஏப்ரல் முதல் செப்டம் பர் வரையான 6 மாதங்களில் உப்பு உற்பத்தி உச்சகட்டத்தை எட்டும். அக்டோபர் மத்தியில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் போது உப்பு சீஸன் முடிவடையும். அதையடுத்த 6 மாதங்கள் உப்பு உற்பத்தி இருக்காது.
முன்னதாகவே தொடக்கம்
நடப்பாண்டு வடகிழக்கு பருவ மழை தாமதமாகவே தொடங்கியது. இதனால், நவம்பர் தொடக்கத்தில் தான் உப்பு உற்பத்தியை, உற்பத்தியாளர்கள் நிறுத்தினர். அந்த சீஸனில், 95 சதவீதத்துக்கு மேல், அதாவது 24 லட்சம் டன் வரை உப்பு உற்பத்தியாகி இருந் தது.
ஆனால், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வழக்கமாக பெய்ய வேண்டிய மழை பெய்யவில்லை. மார்கழி பனியும் குறைந்து, வெயில் அடித்து வருவதால் அடுத்த சீஸனுக்கான பணிகளை உற்பத்தியாளர்கள் தற்போதே தொடங்கிவிட்டனர்.
தரமாக இருக்காது
இதுகுறித்து தூத்துக்குடி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்கச் செயலாளர் ஏ.ஆர்.ஏ.எஸ்.தனபாலன் கூறும்போது, “தூத்துக் குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை ஜனவரி மாதம் தான் உப்பு உற் பத்திக்கான பணிகள் தொடங்கும். இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் சிலர் தற்போதே உப்பு உற்பத்தியைத் தொடங்கிவிட்டனர்.
ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங் களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பதால், பெரும்பாலான உற்பத்தியாளர்கள் உற்பத்தியைத் தொடங்கவில்லை. மேலும், தற்போது உப்பு உற்பத்திக்கு உகந்த சீதோஷ்ணம் இல்லை. உப்பு அடர்த்தி 24 சதவீதம் இருந்தால் தான் தரமாக இருக்கும். ஆனால், தற்போது உற்பத்தியாகும் உப்பின் அடர்த்தி 18 முதல் 20 சதவீதம் தான் உள்ளது. எனவே, இந்த உப்புக்கு சரியான விலை கிடைக்காது.
மாவட்டத்தில் ஏற்கெனவே கடந்த சீஸனில் உற்பத்தி செய்யப்பட்ட 7 லட்சம் டன் உப்பு கையிருப்பில் உள்ளது. விலையும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. எனவே ஜனவரி மாதத்துக்கு பிறகே மாவட்டத்தில் உப்பு உற்பத்தி பணி முழு அளவில் தொடங்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT