Last Updated : 28 Dec, 2016 11:33 AM

 

Published : 28 Dec 2016 11:33 AM
Last Updated : 28 Dec 2016 11:33 AM

விதிமுறை மீறி மணல் அள்ளியதால் பாதிப்பு: மோகனூர் மணல் குவாரியை மூட வேண்டும் - அமைதிப் பேச்சுவார்த்தையில் விவசாயிகள் வலியுறுத்தல்

மோகனூர் காவிரி ஆற்றில் உள்ள மணல் குவாரியில் விதிமுறை மீறி மணல் அள்ளப்படுவதால் அதனை நிரந்தரமாக மூட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் நவலடியான் கோயில் அருகே அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. அந்த மணல் குவாரியில் அள்ளப்படும் மணல், மோகனூர் அருகே செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள இரண்டாம் விற்பனை நிலையத்தில் கொட்டப்படுகிறது. பின், அங்கிருந்து மாநிலம் முழுவதும் மணல் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இரண்டாம் விற்பனை நிலையத் தில் மணலை லாரியில் ஏற்றி, இறக் கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழி லாளர்களுக்கு கூலித் தொகை வழங்குவதில் சிக்கல் உள்ளது. இதனால் ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து மணல் இரண்டாம் விற் பனையாளர்கள் மற்றும் மோகனூர் பகுதி விவசாயிகள், தொழிலாளர்கள் இடையே நாமக்கல் கோட்டாட்சியர் எம்.ராஜசேகரன் தலைமையில் நேற்று அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் எஸ்.மாதேஸ் வரன் (கொமதேக), முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி, மோகனூர் ஊராட்சி ஒன்றிய முன் னாள் தலைவர் நவலடி ஆகியோர் தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர். அவர்கள் பேசியதாவது:

மோகனூர் காவிரி ஆறு மணல் குவாரியில் அரசு அனுமதித்த அள வைத் தாண்டி 200 ஹெக்டேர் பரப் பளவில் மணல் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 3 அடிக்கு மேல் மணல் எடுக்கக்கூடாது.

ஆனால், 35 அடி ஆழம் வரை மணல் அள்ளப்பட்டுள்ளது. விதிமுறை மீறினால் அங்கு மணல் குவாரி நடத்த அனுமதிக்க மாட்டோம். ரூ.600 கோடி மதிப்பில் மணல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அரசுக்கு 3,200 யூனிட் மணல் எடுக்கப் பட்டதாக கணக்கு காண்பிக்கப் பட்டுள்ளது என்றனர்.

இதுபோல் கூட்டத்தில் பேசிய விவசாயிகள் பலரும், மணல் குவாரி யில் விதிமுறை மீறப்பட்டுள்ளதாக வும், அதனால் குடிநீருக்கு தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளதாகவும், மணல் குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

தொடர்ந்து இரண்டாம் விற் பனை நிலையத்தின் அரசு அனுமதிக் கப்பட்ட பொறுப்பாளரான புதுக் கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வெற்றி பேசும்போது, பரமத்தி வேலூர் முதல் மோகனூர் வரை காவிரி ஆற்றில் பாறை உள்ளது. அதனால் 30 அடி ஆழம் வரை மணல் எடுக்க முடியாது. விதிமுறைப்படி குவாரி செயல்படுகிறது, என்றார்.

அவர் கூறிய சில கருத்துக் களுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து பேசிய கோட்டாட்சியர் ம.ராஜசேக ரன், மணல் குவாரிகள் தொடர் பாக வரும் 29-ம் தேதி நடைபெ றும் ஆய்வுக் கூட்டத்தில் விவசாயி கள் கூறிய கருத்துக்கள் தெரிவிக்கப்படும். அதன்பின், பிரச்சினை தொடர்பாக முடிவு செய்து கொள்ளலாம். அதுவரை குவாரியில் மணல் எடுப்பது நிறுத்தம் செய்யப்பட்ட நடவடிக்கை தொடரும், என்றார்.

அன்றே சொன்னது ‘தி இந்து’

மோகனூர் மணல் குவாரியில் விதிமுறை மீறி ராயர் திட்டில் மணல் அள்ளப்படுவதால் காட்டுப்புத்தூர் பகுதியில் 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலம் பாதிக்கப்படும் என, ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் கடந்த 2014 செப்டம்பர் 21-ம் தேதி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இச்சூழலில் நேற்று கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற விவசாயிகள் பலரும் மணல் குவாரி மற்றும் ராயர் திட்டில் விதிமுறை மீறி மணல் எடுத்தது குறித்து பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x