Published : 31 Dec 2016 09:54 AM
Last Updated : 31 Dec 2016 09:54 AM
சபரிமலையில் சுற்றுச்சூழல் பாது காப்பை வலியுறுத்தி மதுரையைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 20 பேர் பிளாஸ்டிக் இல்லா இருமுடி மற்றும் சந்தனம், தேக்கு, மகாகனி மரங்களுடன் சபரிமலை யாத்திரை புறப்பட்டனர்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கார்த்திகை, மார்கழியில் விரதம் இருந்து இருமுடி கட்டி வரும் பக்தர்கள் எருமேலி வழியாகவும், பம்பை வழியாகவும் செல்கின்றனர். ஆண்டு தோறும் கேரளம், தமிழகம், கர்நாட கம், ஆந்திரம் மற்றும் மலேசியா, சிங்கப்பூரில் இருந்தும் 4 கோடி பக்தர்கள் சபரிமலை செல்கின்றனர்.
பக்தர்களின் எண்ணிக்கை அதிகமானதால் சபரிமலையில் பிளாஸ்டிக் பயன்பாடும் அதிகரித்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சபரிமலையில் பிளாஸ் டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கக் கோரி சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்பினர். தொடர்ந்து சபரிமலை, பம்பை மற்றும் சுற்றுப்பகுதிகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்த தடை விதித்து கேரள மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 2011-ல் உத்தரவிட்டது. இருப்பினும் இந்த உத்தரவு அமலுக்கு வரவில்லை. இதனால் பிளாஸ்டிக் பயன்பாடு நீடித்ததால் சுற்றுச்சூழல் பாதிப்பும் அதிகமானது.
இந்நிலையில் கேரள மாநில உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு சபரிமலையில் 2016 பிப்ரவரி மாதம் முதல் பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து 2015-ல் உத்தரவிட்டது. அதோடு சபரிமலையில் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கும், தேவசம் போர்டுக்கும் நீதிபதிகள் உத்தர விட்டனர். இதையடுத்து சபரிமலை யில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட் களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த சூழலில் சபரிமலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது தொடர் பாக பொதுமக்களிடமும், பக்தர் களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத் தும் நோக்கத்தில் மதுரையை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 20 பேர் பிளாஸ்டிக் பை இல்லா இருமுடி கட்டு மற்றும் தலா இரு மரக் கன்றுகளுடன் சபரிமலை யாத் திரை மேற்கொண்டுள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த குருசாமி ஆர்.வேல்முருகன் தலைமையில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.காந்தி, முத்துக்குமார், தில்லை பிரபாகர், எஸ்.என்.ஆர்.ராஜேந் திரன், எஸ்.ராகவேந்திரன், வழக்கறி ஞர்கள் விக்னேஷ், சிவசங்கர் உள் பட 20 பேர், ‘பசுமையை காப்போம், சபரிமலையை காப்போம்’ என அச்சிடப்பட்ட டி-சர்ட்களை அணிந்து, ஒவ்வொருவரும் தேக்கு, சந்தனம், மகாகனி மரக்கன்று களுடன் மதுரை மேலமாசி வீதி, வடக்குமாசி வீதி ஐயப்பன் கோயி லில் நேற்று காலை பயணத்தைத் தொடங்கினர்.
பொதுவாக இருமுடிக்குள் சந்தனம், மஞ்சள், விபூதி, நெய், அரிசி, தேங்காய் மற்றும் பூஜை பொருட்கள் பிளாஸ்டிக் பையில் வைத்து வைக்கப்படுவது வழக்கம். இவர்கள் பிளாஸ்டிக் பை இல்லாமல் இருமுடிக்குள் பூஜை பொருட்களை வைத்து தலையில் சுமந்து சென்றனர்.
இந்த 20 பேர் குழுவை இன்று காலையில் பம்பையில் பத்தனம் திட்டா மாவட்ட ஆட்சியர் ஆர்.கிரிஜாவின் பிரதிநிதி வரவேற் கிறார். அவரிடம் 40 மரக்கன்று களையும் ஒப்படைக்கின்றனர். பின்னர் பம்பையில் இருந்து நடைபயணமாக சபரிமலை சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து ஜன. 1-ல் மதுரை திரும்புகின்றனர்.
விழிப்புணர்வு பயணக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.காந்தி கூறும்போது, சபரிமலை போன்ற மக்கள் கூடும் இடங்களில் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டியது கட்டாயம். அந்த நோக்கத்தில் சுற்றுச்சூழலுக்கு அதிக தீங்கு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட் களுக்கு சபரிமலை மற்றும் சுற்றுப் பகுதியில் பயன்படுத்த தடை விதிக் கப்பட்டுள்ளது. இந்த தடையை பிற பக்தர்களுக்குத் தெரியப்படுத்தும் நோக்கத்தில் சபரிமலை பய ணத்தை விழிப்புணர்வு பயணமாக மேற்கொள்கிறோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT