Published : 30 Apr 2014 09:14 AM
Last Updated : 30 Apr 2014 09:14 AM

அகதிகள் போர்வையில் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் ஊடுருவ முயற்சியா?

அகதிகள் போர்வையில் தமிழகத் துக்குள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் ஊடுருவ முயற்சி செய்து வருவதாக யாழ்ப் பாணத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

விடுதலைப் புலிகள் இயக் கத்தை மீண்டும் உயிர்ப் பித்து ஒன்றிணைக்கும் முயற்சியில் கோபி என்பவர் ஈடுபட்டிருப்பதாகவும், இவருக்கு உதவியாக கஜீபன் பொன்னையா செல்வநாயகம், தேவியன் என்கிற சுந்தரலிங்கம் கஜீபன் ஆகியோர் செயல்பட்டதாகவும், இவர்களைத் தேடிவந்த போலீஸ் அதிகாரி ஒருவரை கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் தாக்கிவிட்டு தப்பி ஓடியதாகவும் இலங்கை அரசு தரப்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில், வவுனியா மாவட்டம் நெடுங்கேணி வனப் பகுதியில் கோபி, கஜீபன், தேவியன் ஆகிய மூவரும் ஏப்ரல் 10-ம் தேதி இரவு இலங்கை பாது காப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சி செய்பவர்களுக்கு உதவியதாகக் கூறி 70-க்கும் மேற்பட்டோரை இலங்கை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் இலங்கையில் விடு தலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் தொடர்ச்சி யான தேடுதல் வேட்டையிலும் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், உயிருக்குப் பயந்து தமிழகத்துக்கு அகதிகளாக வர புலிகளின் ஆதரவாளர்கள் முயற்சி செய்து வருவதாக யாழ்ப் பாணத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து மண்டபம் அகதிகள் முகாம் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாகத் தேர்தல் வேலை பார்த்தவர்கள், கடன் பிரச் சினை காரணமாக இடம் பெயர்ந்தவர்கள் எனக் கடந்த 6 மாதங்களில் இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு 10-க்கும் குறைவான அகதிகளே வந்துள்ளனர். இலங்கையின் நிலவரம் குறித்து எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால், அகதி கள் வருகை குறைந்துள்ளது. இலங்கைக்கு திரும்பிச் செல் வோரின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x