Published : 24 Nov 2022 12:14 PM
Last Updated : 24 Nov 2022 12:14 PM

சோலார் பேனல் முதல் காய்கறி தோட்டம் வரை: பசுமை பள்ளிகள் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

கோப்புப் படம்

சென்னை: தமிழகத்தில் உள்ள 25 பள்ளிகளை தேர்வு செய்து பசுமை பள்ளிகள் திட்டத்தை செயல்படுத்த தமிழக சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை முடிவு செய்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் நடந்த சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, பசுமைப் பள்ளிக்கூடம் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவித்தார். இதன்படி ஒரு பள்ளிக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் 25 பள்ளிகளுக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கி உள்ளது.மேலும் இந்த பள்ளிகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் விவரம்:

  • சூரிய ஆற்றலின் உதவியுடன் சூரிய சக்தி மோட்டார் பம்புகள்
  • பள்ளியின் அனைத்து மின்தேவைகளுக்கும் சூரிய ஆற்றலை பயன்படுத்துதல்
  • மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்துதல்.
  • குப்பையில் இருந்து உரம் தயாரித்தல்.
  • பள்ளிகளில் சிறிய அளவிலான காட்டை உருவாக்குதல்.
  • காய்கறி மற்றும் மூலிகைத் தோட்டங்களை உருவாக்குதல்.
  • பழங்கள் தரும் மரங்களை நடுதல்.
  • நீர் பயன்பாட்டை குறைத்து கழிவு நீரை மறுசுழற்சி செய்வதை அதிகரித்தல்.
  • ஞெகிழி இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்குதல்.
  • உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தபடவுள்ளது.

இதை கண்காணிக்க மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், முதன்மை கல்வி அலுவலர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x