Published : 24 Nov 2022 06:53 AM
Last Updated : 24 Nov 2022 06:53 AM
சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.38.98 கோடியிலான பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். கொளத்தூர் தொகுதி தீட்டி தோட்டம் முதல் தெருவில் ரூ.1.27 கோடியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்துவைத்து, மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். வீனஸ் நகரில் ரூ.7.75 கோடியில் கட்டப்பட்டுள்ள, ஒருங்கிணைந்த அரசு பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவர் விடுதிக் கட்டிடத்தையும் அவர் திறந்து வைத்தார்.
வீனஸ் நகர், ஜெயந்தி நகர்பகுதிகளில் விடுபட்ட தெருக்களுக்கு ரூ.19.56 கோடியில் கழிவுநீர் அகற்றும் திட்டம் மற்றும் உந்து நிலையம் அமைக்கும் பணி, ஜம்புலிங்கம் பிரதான வீதியில் இருந்து குமாரப்பா சாலை வரைரூ.37 லட்சத்தில் குடிநீர்க் குழாய் அமைக்கும் பணி, ஜிகேஎம் காலனி 24-வது தெருவில் இருந்து பெரியார் நகர் நீரூற்று நிலையம் வரை ரூ.97 லட்சத்தில் கழிவுநீர்க் குழாய் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிவைத்தார்.
அதேபோல, பந்தர் கார்டன் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.4.37 கோடியில் மேம்பாட்டுப் பணி, பள்ளி சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ரூ.4.99 கோடியில் கூடுதல் வகுப்பறைகள் மற்றும்ஸ்மார்ட் வகுப்பறைகள் கட்டும் பணி, பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.8.72 கோடியில் மேம்பாட்டுப் பணி, பல்லவன் சாலையில் உள்ளநியாயவிலைக் கடைக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி, தீட்டித் தோட்டம் 4-வது தெருவில் உள்ள இரவுக் காப்பகம், பேப்பர் மில்ஸ்சாலையில் உள்ள ஆரம்ப சுகாதாரநிலையம், குருசாமி தெருவில் உள்ள ஜார்ஜ் காலனி பூங்கா, பல்லவன் சாலையில் உள்ள கே.கே.ஆர். அவென்யூ பூங்கா ஆகியவற்றை மேம்படுத்தும் பணிகள் உட்பட 37 பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். புதிய திட்டப் பணிகள் மொத்தம் ரூ.38.98 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளன.
முன்னதாக, பந்தர் கார்டன் மற்றும் பள்ளி சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஆசிரியர்களுக்கு பரிசுப் பொருட்களையும், மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களையும் முதல்வர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளில், அமைச்சர்கள் கே.என்.நேரு, ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, எம்.பி.க்கள் கலாநிதி வீராசாமி, ஆர்.கிரிராஜன்,எம்எல்ஏ தாயகம் கவி, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை முதன்மைச் செயலர் மங்கத் ராம் சர்மா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment