Published : 27 Dec 2016 10:23 AM
Last Updated : 27 Dec 2016 10:23 AM
அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்குப் பிறகு கட்சி சசிகலாவின் முழு கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று அதன் செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சி, கட்சி செயல்பாடு கள் குறித்து வைகைச் செல்வன் ‘தி இந்து’ தமிழ் செய்தியாளரிடம் கூறி யதாவது: டிசம்பர் 29-ம் தேதி நடக்க வுள்ள பொதுக்குழு கூட்டத்தில் சசி கலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவது உறுதி. 1967-ம் ஆண்டு முதலே தமிழகத்தில் கட்சித் தலைவர், முதல்வர் என இரு பதவி களிலும் ஒரே நபரே இருந்துள்ளார். பொதுச் செயலாளர் தேர்வுக்குப் பிறகு கட்சி தனது முழு கட்டுப்பாட்டுக்கு வந்த பின்னர், ஆட்சியைப் பற்றிய முடிவை சசிகலாவே எடுப்பார். சலசலப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சூழ்ச்சி வலை ஆங்காங்கே பின்னப்படுகிறது.
அதிமுக பலமுறை பிளவு கண்டுள் ளது. பலர் போட்டி கட்சியை தொடங்கி யுள்ளனர். ஆனாலும், வெற்றிகரமாக கொண்டு சென்று, ஆட்சி அமைக்க தவற விட்டுவிட்டனர். இதனால் யாரை நம்பியும் இயக்கத்தினர் செல்ல தயாராக இல்லை. அதிமுக, இரட்டைஇலை என இரண்டும் ஒரே இடத்தில் உள்ள நிலையில், சசிகலா சரியான பாதையில் இட்டுச் செல்வார் என்ற நம்பிக்கையில் அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.
பக்தவத்சலம் முதல் ஜெயலலிதா வரை தமிழக முதல்வராக பெரும் பான்மை சமூகத்தினர் இருந்தது இல்லை. தற்போது ஆட்சி, கட்சியில் பெரும்பான்மை சமுதாயத்தினர் வந்தால் சிறுபான்மையினர் நசுக்கப் படுவார்களோ என்ற தவறான ஊகத்தின் அடிப்படையில் திட்டமிட்டு பொய் செய்தி பரப்பப்படுகிறது.
தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ் செய்த தவறுக் காக அதிமுக அரசின் மீது வஞ்சகப் பார்வையுடன், பழிவாங்கும் போக்கை மத்திய அரசு கையில் எடுத்தால் கூட்டாட்சி தத்துவத்துக்கு வேட்டு வைப்பதாகத்தான் பார்க்க வேண்டும். எங்கள் ஆதரவு இல்லாமல் மாநிலங்களவையில் எந்த தீர்மானத் தையும் நிறைவேற்ற முடியாது என்பது பாஜகவுக்கு தெரியும்.
முதல்வர் பதவி ஏற்றது முதல் தற்போது வரை ஓ.பன்னீர்செல்வத் துக்கும், சசிகலாவுக்கும் இடையே இடைவெளி இருப்பதாக சமூக வலைதளங்களில் திட்டமிட்டு பரப் பப்படுவது வதந்தியே என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT