Published : 23 Nov 2022 07:46 AM
Last Updated : 23 Nov 2022 07:46 AM
சென்னை: புவி ஆய்வுக்கான இஓஎஸ்-06 (ஒசோன்சாட்-03) செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் மூலம் நவ. 26-ம் தேதி காலை 11.56 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது.
இந்த ராக்கெட்டில் ஒசோன்சாட் தவிர்த்து அமெரிக்காவின் ஆஸ்ட்ரோகாஸ்ட், துருவா ஸ்பேஸ் நிறுவனத்தின் தைபோல்ட், பூட்டான் சாட், பிக்சலின் ஆனந்த் உள்ளிட்ட 8 நானோ செயற்கைக்கோள்களும் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளன.
ராக்கெட் ஏவுதலின் இறுதிகட்ட பணிகளுக்கான கவுன்ட்டவுன் நவ. 25-ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிஎஸ்எல்வி ராக்கெட் ஏவுதலை பொதுமக்கள் நேரில் பார்வையிட அனுமதி தரப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://lvg.shar.gov.in/ என்ற இணையதளம் வழியாக முன்பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT