Published : 22 Nov 2022 07:24 AM
Last Updated : 22 Nov 2022 07:24 AM
நாமக்கல்: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பூல்பாண்டி(72). இவர் பல இடங்களில் யாசகம் பெற்று சேர்த்த ரூ.10 ஆயிரத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக கூறி நேற்று நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலர்களிடம் தெரிவித்தார். பின்னர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வங்கியில் ரூ.10 ஆயிரத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு செலுத்தினார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: எனது மனைவி இறந்துவிட்டார். இரு மகள், மகன் உள்ளனர். அவர்கள் திருமணமாகி தனியாக வசிக்கின்றனர். தற்போது, நான் யாசகம் செய்து ஜீவனம் நடத்துகிறேன். மும்பையில் சலவைத் தொழில் செய்து வந்தேன். அங்கு பள்ளிகளில் மரக்கன்றுகள் நட்டு வந்தேன். யாசகம் மூலம் எனக்கு கிடைக்கும் பணத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தொடர்ந்து வழங்கி வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT