Published : 15 Dec 2016 08:51 AM
Last Updated : 15 Dec 2016 08:51 AM

புயலால் 200 அரசு பேருந்துகள் சேதம்: ரூ.4 கோடிக்கு பொருட்சேதம் என ஆய்வில் தகவல்

சென்னையை தாக்கிய வார்தா புயலால் 200 அரசு பேருந்துகள் பழுதாகியுள்ளன. மேலும், ரூ.4 கோடிக்கு பொருட்சேதம் ஏற்பட் டுள்ளதாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

சென்னையில் கடந்த 12-ம் தேதி தாக்கிய வார்தா புயலால் 50 மாநகர பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்தன. இதுதவிர, 100-க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகளின் மேற்கூரைகள் மற்றும் ஜன்னல் கண்ணாடிகள், கதவுகள், இருக்கை கள் சேதமடைந்துள்ளன. சைதாப் பேட்டை, பல்லாவரம், குரோம் பேட்டை, தியாகராயநகர், தாம்பரம் போன்ற முக்கிய பேருந்து நிலை யங்களில் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன. பாடியநல்லூர், ம.காகவிபாரதி நகர், செம்மஞ்சேரி, பெரம்பூர், ஆதம்பாக்கம் ஆகிய பணிமனைகளில் சுற்றுச்சுவர் கூரைகள் விழுந்தன.

சில பணிமனைகளில் டீசல் டேங்குகளில் மழைநீர் புகுந்து விட்டது. மாநகர பேருந்துகளில் டீசல் பிடிப்பதற்கும் சில ‘பங்க்’கு களில் மின்சார வசதி இல்லாமல் இருந்தது. ஜிஎஸ்டி சாலை, பூந்த மல்லி நெடுஞ்சாலை, அண்ணா சாலை போன்ற முக்கிய சாலை களில் ஆங்காங்கே பெரிய பெரிய மரங்களும் சாய்ந்தன. இதனால், மாநகர பேருந்துகளின் சேவை பாதிக்கப்பட்டது. இதுபோன்ற பிரச்சினைகளை உடனுக்குடன் சமாளித்து 60 சதவீத மாநகர பேருந்து கள் இயக்கப்பட்டன. விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இயக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட பேருந்துகள் சேதமடைந்தன.

மாநகர பேருந்துகள் சேதம்

இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பரில் கனமழை பெய்தபோது சுமார் 300 பேருந்துகள் மட்டுமே சேதமடைந்தன. ஆனால், சமீபத்தில் தாக்கிய புயலால் பேருந்துகள் மட்டுமல்லாமல், பேருந்து நிலையங் கள், பணிமனைகளும் சேதமடைந் துள்ளன. சுமார் 150-க்கும் மேற்பட்ட பேருந்துகள் சேதமடைந்துள்ளன. கண்ணாடிகள், இருக்கைகள், மேற் கூரைகளும் சேதமடைந்துள்ளன.

இதுதவிர, பல்வேறு இடங்களில் பணிமனைகளின் மேற்கூரைகளும், சுற்றுச்சுவர்களும் இடிந்துள்ளன. இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மாநகர போக்கு வரத்து கழகத்துக்கான வருவாய் இழப்பு கணக்கில் கொள்ளா மல் பொருட்சேதம் மதிப்பு மட்டுமே ரூ.4 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது தொடர்பாக விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நூற் றுக்கணக்கான பேருந்துகள் இயக் கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் தாக்கிய புயலால் 50 அரசு பேருந்துகளின் கண்ணாடிகள், மேற்கூரைகள் சேதமடைந்துள்ளன. சில பேருந்து நிலைய மேற் கூரைகளும், பணிமனைகளும் சேதமடைந்துள்ளன. சுமார் ரூ.50 லட்சம் வரையில் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x