Published : 15 Dec 2016 02:22 PM
Last Updated : 15 Dec 2016 02:22 PM
தீப்பெட்டி தொழிற்சாலைகளின் உரிமத்தை புதுப்பிப்பதற்காக புதிய நடைமுறைகளை அரசு வெளியிடாததால் விருதுநகர் மாவட்டத்தில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 800-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. இத்தொழிலில் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் பணிபுரிகின்றனர்.
இங்கு தயாராகும் தீப்பெட் டிகள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இத்தொழில் மூலம் ஆண்டுக்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்படுகிறது.
தீப்பெட்டி தொழிற்சாலைகள் செயல்பட மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் படைக்கலச் சட்டத்தின் கீழ் உரிமம் வழங் கப்படுகிறது. இந்த உரிமம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகளின் உரிமங்கள் இந்த ஆண்டு புதுப் பிக்கப்பட வேண்டும். ஆனால், மத்திய அரசு படைக்கலச் சட்டத்தில் கொண்டு வந்துள்ள புதிய உத்தரவுகள், அதன் மூலம் தீப்பெட்டி தொழிற்சாலைகள் தங்கள் உரிமங்களை எவ்வாறு புதுப்பிக்க வேண்டும் என்பது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் அறிவிக்கப்பட வேண்டும்.
ஆனால் படைக்கலச் சட்டத்தில் கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு பல்வேறு திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. இது குறித்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர் களுக்கு இதுவரை தெரிவிக் கப்படவில்லை. எனவே தொழிற்சாலைகள் டிசம்பர் மாதத்துடன் மூடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சாத்தூர் தொழில் முனைவோர் சங்கத் தலைவர் எஸ்.பழனிக்குமார் கூறியதாவது:
தீப்பெட்டி தொழிற்சாலைகளின் உரிமத்தை இந்த ஆண்டு புதுப் பிப்பதற்கான புதிய நடைமுறைகள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இதனால், தீப்பெட்டி ஆலை களின் படைக்கலச் சட்ட உரிமத்தை புதுப்பிக்க முடியவில்லை.
தீப்பெட்டி ஆலைகள் உரிமம் புதுப்பிக்கப்படாத பட்சத்தில் டிசம்பர் மாதத்துக்கு பிறகு உற்பத்தியை நிறுத்த நேரி டும்.
இதனால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக் கும் அபாயம் ஏற்படுவதோடு, ஆண்டுக்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்படும்.
எனவே தீப்பெட்டி தொழிற் சாலைகளின் உரிமத்தை புதுப் பிக்கும் வழிமுறைகள் குறித்து, தமிழக அரசு உடனே அறிவிக்க முதல்வர் பன்னீர்செல்வம், வரு வாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT