Published : 21 Nov 2022 05:25 PM
Last Updated : 21 Nov 2022 05:25 PM

தமிழகத்தில் பிரசவங்கள்: தனியார் மருத்துவமனைகளில் உயர்வு; பின்தங்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்

கோப்புப் படம்

சென்னை: தமிழகத்தில் 99.9% சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. இவற்றில் தனியார் மருத்துமனைகளில் 40 சதவீத பிரசவங்கள் நடைபெறுகின்றன. மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் என்று அனைத்து வகையான மருத்துவமனைகளிலும் மகப்பேறு சேவைகள் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் தினசரி சராசரியாக 1,496 பிரசவங்கள் நடைபெறுகின்றன. இவற்றில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 283, மாவட்ட அரசு தலைமை மற்றும் வட்டார மருத்துவமனைகளில் 494, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 719 பிரசவங்கள் நடக்கின்றன. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் தனியார் மருத்துவமனையில் பார்க்கப்படும் பிரசங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பார்க்கப்படும் பிரசவங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது.

தனியார் மருத்துவமனைகள்: தமிழகத்தில் ஓர் ஆண்டில் நடக்கும் பிரசவங்களில் 40 சதவீத பிரசவங்கள் தனியார் மருத்துவமனையில் நடைபெறுகின்றன. 2011 - 12ம் ஆண்டில் 31.1 சதவீதம், 2012 - 13ம் ஆண்டில் 31.1 சதவீதம், 2013 - 14ம் ஆண்டில் 28.6 சதவீதம், 2014 - 15ம் ஆண்டில் 28.5 சதவீதம், 2015 - 16ம் ஆண்டில் 32.3 சதவீதம், 2016 - 17ம் ஆண்டில் 33.2 சதவீதம், 2017 - 18ம் ஆண்டில் 34.2 சதவீதம், 2018 - 19ம் ஆண்டில் 39.2 சதவீதம், 2019 - 20ம் ஆண்டில் 40.7 சதவீதம், 2020 - 21ம் ஆண்டில் 39 சதவீதம், 2021 - 22ம் ஆண்டில் 39.5 சதவீதம், 2022 - 23ம் ஆண்டில் 39.5 சதவீதம் என்று மொத்தம் 40 சதவீத பிரசவங்கள் தனியார் மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன.

அரசு மருத்துவமனைகள்: அரசு மருத்துவமனைகளில் 2011 - 12ம் ஆண்டில் 37.9 சதவீதம், 2012 - 13ம் ஆண்டில் 40.4 சதவீதம், 2013 - 14ம் ஆண்டில் 43.1 சதவீதம், 2014 - 15ம் ஆண்டில் 45.3 சதவீதம், 2015 - 16ம் ஆண்டில் 47.7 சதவீதம், 2016 - 17ம் ஆண்டில் 49.01 சதவீதம், 2017 - 18ம் ஆண்டில் 49.5 சதவீதம், 2018 - 19ம் ஆண்டில் 46.2 சதவீதம், 2019 - 20ம் ஆண்டில் 45.8 சதவீதம், 2020 - 21ம் ஆண்டில் 49.1 சதவீதம், 2021 - 22ம் ஆண்டில் 50 சதவீதம், 2022 - 23ம் ஆண்டில் 49.8 சதவீதம் என 50 சதவீத பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன.

ஆரம்ப சுகாதார நிலையங்கள்: அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2011 - 12ம் ஆண்டில் 28.3 சதவீதம், 2012 - 13ம் ஆண்டில் 27.9 சதவீதம், 2013 - 14ம் ஆண்டில் 28.1 சதவீதம், 2014 - 15ம் ஆண்டில் 26 சதவீதம், 2015 - 16ம் ஆண்டில் 19.4 சதவீதம், 2016 - 17ம் ஆண்டில் 16.9 சதவீதம், 2017 - 18ம் ஆண்டில் 15.6 சதவீதம், 2018 - 19ம் ஆண்டில் 14.2 சதவீதம், 2019 - 20ம் ஆண்டில் 13.3 சதவீதம், 2020 - 21ம் ஆண்டில் 11.8 சதவீதம், 2021 - 22ம் ஆண்டில் 10.3 சதவீதம், 2022 - 23ம் ஆண்டில் 10.7 சதவீதம் என்று மொத்தம் 10 சதவீத பிரசவங்கள் மட்டுமே அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன.

இதன்படிப் பார்த்தால் தமிழகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவதில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் முக்கியப் பங்கு விகிக்கிறது. குறிப்பிட்ட சில ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் பிரசவம் பார்க்கும் வசதி உள்ளது. இதன் காரணமாகதான் அரசு மருத்துவமனைகளில் அதிக பிரசவம் நடைபெறுகிறது. எனவே, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம் பார்க்கும் வசதிகளை அதிக அளவு உருவாக்க வேண்டும" என்று அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x