Published : 21 Nov 2022 06:45 AM
Last Updated : 21 Nov 2022 06:45 AM

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை விரைவில் முதல்வர் அறிவிப்பார்: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

திருப்பத்தூர்: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை விரைவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பொது விநியோகத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தும் மாநிலமாக தமிழகம் உள்ளது. நாட்டிலேயே கால்நடைப் பராமரிப்புக்கு வட்டியில்லா கடன் தமிழகத்தில்தான் வழங்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் தற்போதுவரை ரூ.40 கோடி அளவுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 6 மாதங்களில் ரூ.100 கோடிக்கு மேல் கடன் வழங்கப்படும்.

அரசு ஊழியர்களுக்கு நிகராக கூட்டுறவு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. கூட்டுறவுத் துறையில் 2023 ஜனவரியில் 6,500 ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை விரைவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.திருப்பத்தூரில் நடந்த விழாவில் சிறந்த கூட்டுறவுச் சங்கங்களுக்குக் கேடயங்களை வழங்கிய அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.ஆர்.பெரியகருப்பன் உள்ளிட்டோர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x