Published : 19 Nov 2016 12:12 PM
Last Updated : 19 Nov 2016 12:12 PM
உளுந்தூர்பேட்டை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் சிதறிய நிலையில் 3 பேர் சடலம் கண் டெடுக்கப்பட்டது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை நகர் என்ற கிராமத்தை யொட்டி ரயில் நிலையம் அமைந் துள்ளது. நேற்று அதிகாலை நகர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வயல்வெளிக்கு செல்வதற் காக அங்குள்ள ரயில்வே தண்ட வாளத்தை கடந்து சென்றபோது தண்டவாளத்தில் ஒரு சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந் தனர்.
பின்னர் அந்தப்பகுதியில் சென்று பார்த்தபோது அடுத்தடுத்து 3 சடலங்கள் கிடந்தது தெரியவந்தது. ரயில் தண்டவாளத்தில் ஒரு ஆண் மற்றும் பெண் சடலம் உடல் சிதறிய நிலையிலும், தண்டவாளத்தின் இடதுபுறத்தில் ஆண் சடலம் ஒன்று தலை கால்களில் பலத் தக் காயத்துடனும் கிடந்தன. இது குறித்து கிராம மக்கள் உடனடி யாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்துக்கும், விருத்தாசலம் ரயில்வே காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.
தேனியைச் சேர்ந்தவர்கள்
இதையடுத்து சம்பவ இடத் துக்குச் சென்ற சண்முகவேல் தலை மையிலான விருத்தாசலம் ரயில்வே போலீஸார் வந்து விசாரணை நடத்தினர். இறந்தவர்கள் தேனி மாவட்டம் போடியநாயக்கனூரை அடுத்த திருமலைபுரத்தைச் சேர்ந்த சகாயபால் மார்லன் மாத்யூ(43), அவரது மனைவி சாந்தினி(37) மற்றும் அவரது மாமனார் சாமுவேல் செல்லையா(60) என்பது தெரிய வந்தது.
இவர்கள் 3 பேரும் இரு ஆண்டு களுக்கு முன் சொந்த ஊரை விட்டு சென்னையை அடுத்த நெற்குன்றத்தில் வசித்து வந்துள்ள னர். இந்த நிலையில் சகாய பால் மார்லன் மாத்யூ வெளிநாட்டுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் தொழில் செய்து வந்ததாகவும், அந்த வகையில் நிறைய பேரிடம் பணம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் பாதிக் கப்பட்டவர்களில் ஒருவர் சென்னை கீழக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், கடந்த 16-ம் தேதி மாத்யூ விசாரணைக்குச் சென்றுள்ளார். இதையடுத்து போலீ ஸார் அவரை 17-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரச்சொன்னதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர் விசாரணைக்குச் செல்லவில்லை.
போலீஸார் விசாரணை
இந்த நிலையில் மாத்யூ தனது குடும்பத்தினருடன் நேற்று சொந்த ஊருக்கு செல்ல ரயிலில் கிளம்பியிருக்கலாம். மனமுடைந்து உளுந்தூர்பேட்டை அருகே தற்கொலை சென்று கொண்டிருக்கலாம் என ரயில்வே போலீஸார் கருதுகின்றனர். மாத்யூ வின் சகோதரர் வில்பர்டு விருத் தாசலம் ரயில்வே போலீஸாரிடம் அளித்தப் புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT