Published : 19 Nov 2022 01:29 PM
Last Updated : 19 Nov 2022 01:29 PM
சென்னை: ஒரு குழந்தைகூட துன்புறுத்தப்படாமல் பாதுகாப்போம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினத்தை முன்னிட்டு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நவ.19 சர்வதேச குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினம். குழந்தைகளை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்துவது தண்டனைக்குரிய குற்றம். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்களின் கல்விக்கு உதவ வேண்டியது நமது கடமை. எந்தக் குழந்தையும் உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ துன்புறுத்தப்படாமல் பாதுகாப்போம். 14417, 1098 ஆகிய உதவி எண்களை அனைத்து குழந்தைகளுக்கும் தெரியப்படுத்துவோம். அதற்கான விழிப்புணர்வை மேற்கொள்வோம்." இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.
#Nov19 சர்வதேச குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினம்.
குழந்தைகளை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்துவது தண்டனைக்குரிய குற்றம்!
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்களின் கல்விக்கு உதவ வேண்டியது நமது கடமை!
1/2— Anbil Mahesh (@Anbil_Mahesh) November 19, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT