Published : 17 Nov 2022 11:24 AM
Last Updated : 17 Nov 2022 11:24 AM
மதுரை: தமிழகத்தில் அடுத்த ஓராண்டுக்குள் ஒன்றிய அளவில் கட்சியை பலப்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக நிர்வாகிகளுக்கு மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் பால் விலை உயர்வைக் கண்டித்து நவ.15-ல் பாஜக சார்பில் அனைத்து ஒன்றியங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் அதிக அளவில் ஆட் களை திரட்டி போராட்டம் நடத்திய வட்டாரத் தலைவர்களுக்கு அண்ணாமலை பாராட்டுத் தெரி வித்தார். இது தொடர்பாக பாஜக நிர்வாகிகளுடன் குழு அழைப்பில் (கான்பரன்ஸ் கால்) அண்ணாமலை பேசியதாவது:
பால் விலை உயர்வைக் கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப் பாட்டம் தமிழகம் முழுவதும் பேசப்படும் போராட்டமாக மாறியுள்ளது. இதில் அதிகளவில் கோவை மதுக்கரை ஒன்றியத்தில் 700 பேர், சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை கிழக்கு ஒன்றியத் தில் 640 பேர், கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்தில் 500-க்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
ஆர்ப் பாட்டம் தொடர்பாக மாவட்டத் தலைவர்கள் அறிக்கை அனுப்பி யுள்ளனர். திண்டுக்கல்லில் பிரதமர் பங்கேற்ற நிகழ்வு சிறப்பாக அமைந்தது. சென்னையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையும் சிறப்பாக இருந்தது. பிரதமரும், அமித்ஷாவும் கட்சி வளர்ச்சிக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். தமிழகத்தில் பாஜகவுக்கான சூழல் நன்றாக உள்ளது. ஆனால் அமைப்புரீதியாக கட்சியை இன் னும் பலப்படுத்த வேண்டும் என பிரதமரும், அமித்ஷாவும் அறி வுறுத்தியது முக்கியமானது.
இதனால் அடுத்த ஓராண்டுக்கு கட்சியை ஒன்றிய அளவில் பலப்படுத்தும் பணியை செய்ய வேண்டும். இதை செய்தால் கட்சி மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும். இதை ஒரு சபதமாக எடுத்து நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT