Published : 16 Nov 2016 02:05 PM
Last Updated : 16 Nov 2016 02:05 PM
வங்கிகளில் 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுபவர்களுக்கு கை விரலில் மை வைக்க மத்திய அரசு முடிவு செய்ததை அடுத்து இணையதளங்களில் அதற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
ஜனநாயகத்தையும் சர்வாதிகாரத்தையும் கைவிரல் மை நிர்ணயிப்பதுதான் நகைமுரண்!
பேங்கில் பணம் எடுக்க வருபவர்கள் கையில் மை வைக்கப்படும் - செய்தி
500 ரூபாய் மாத்துனா ஒரு விரல்ல...1000 ரூபாய் மாத்துனா இரண்டு விரல்ல வைங்க. 10000 ரூபாய்க்கு மேல மாத்துனா, முகத்தை மையில முக்கி எடுத்துடுங்க. அப்பதான் கணக்கு தெரியும்..
மை - எக்ஸ்சேஞ்ஜ் செய்தால் மட்டுமே..
உங்கள் கணக்கில் இருந்து பணம் எடுக்க அல்ல..
INDIA IS THE LARGEST DE'மை'CRACY .
இதுவரை ஓட்டுக்கு மை!
இன்று முதல் நோட்டுக்கும் மை!
4500 மாற்றுபவர்களுக்கு மை வைச்சா, 2.5 லட்சம் டெபாசிட் செய்பவர்களுக்கு பச்சை குத்துவாங்களா..?
நெரிசலை தவிர்க்க பணம் எடுக்க வருபவர்களுக்கு கை விரலில் அடையாள மை வைக்கப்படும் - மத்திய அரசு...
மை வச்சு கள்ளஓட்டு போடுறவங்களையே பிடிக்க முடியாத நீங்க அந்த மைய வச்சு எப்படி கறுப்புப் பணத்தை பிடிக்க போறீங்க?
கார்ப்பரேட்காரர்கள் பெரிய பெரிய மால்கள்ல பையையும் பர்ஸையும் பூட்டிட்டுதான் நம்மை உள்ளயே அனுப்பறாங்க. என்னை திருடன்னு நினைச்சீங்களான்னு கோபம் வராம, ஏதோ கலைமாமணிப் பட்டம் வாங்கப் போறமாதிரி பூட்டின பையோட கெத்தா உள்ள நுழையறது நாமதானே!
ஒரு திட்டத்துல ஒரு சாரார் (சாமர்த்தியசாலி) மட்டும் பயனடைஞ்சு எளியவன் ஏமாந்துடக்கூடாதேன்னு ஆட்சியிலிருக்கற ஒரு அரசு விரல்ல அடையாள மை வைக்கறதுதான் இப்ப கௌரவக் குறைச்சலாப் போயிடுச்சா?
Karthik Srinivasan @vkasri
இன்னிக்கு பேங்க்ல கூட்டமெல்லாம் கம்மியாகிட்டா மாதிரி இருக்கே ! #மை
மை வைக்கும் அளவுக்கா பொறுப்பற்று, அறமற்று போனோம் பொது மக்களே?
பணம் கொடுக்குறீங்க, மை வைக்கிறீங்க.. அப்படியே ஓட்டும் போட சொன்னா உள்ளாட்சி தேர்தல முடிச்சுரலாம்..
எல்லாரும் எங்கடா ஓடுறீங்க...?
பேங்குக்கு.... அங்க மொய் வைக்கிறாங்களாம்...!
அடேய்.... அது மொய் இல்ல... மை.
*
பேங்க் ஆபிசர்: ஏம்மா முகத்தை இவ்வளவு பக்கத்துல காட்றீங்க?
நோட்டு மாத்தினா மை வைப்பாங்கன்னு சொன்னாங்க சார்.
அது கண்ணுல இல்லம்மா! கை விரல்ல.. கையை நீட்டுங்க!
அப்டியா சார், அப்போ இந்த 2000 ரூவா நோட்டுக்கு மேட்ச்சா பிங்க் கலர்லயே வைங்க!
கறை நல்லதான்னு தெரியல!!!
ஆனா மை நல்லது!!!
நோட்டை மாற்றி கொள்ள 50 நாள் அவகாசம் கொடுத்தா 50 நாளும் நோட்ட எல்லோரும் மாத்தினா, கையிலே மை வைக்காம வாழைப்பழத்தையா வைக்கும் அரசு!
"மை" ய அரசு,
கறுப்பை வெள்ளையாக்கக்
கவலைப்படும் தேசத்தில்
வெள்ளையை ஏன் கறுப்பாக்குகிறீர்கள்?
'மை' அடிப்பதை நிறுத்துங்கள்
பழைய நோட்டுக்களை கணக்கில் காட்டாமல் நேரிடையாக மாற்றுபவர்களுக்கே பிரச்சனை.
ஏடிஎம்ல பணம் வைங்கன்னா, விரல்ல மை வைக்கிறாங்களாம்...
ஒரு மில், 400 நம்பகமான தொழிலாளர்கள், தலா 4000 ரூபாய், குறைந்தது மூன்று வங்கி, ஆறு நாட்களாக மாற்றிய பணம் எவ்வளவு? இது மிகச்சிறிய உதாரணம்!
ரூ. 48,00,000. மை வைக்கக்கூடாதுன்னு நம்மூரு பெரிய மனுஷங்க குரல் கொடுக்குறது இதுக்குதான் போல.
மக்களை அவமானப்படுத்தும் செயல் என்றால் தேர்தலில் மை வைக்கும் பொழுது அவமானமாக இல்லையா?
தேர்தலில் நாம் வைத்துக் கொண்ட ஒவ்வொரு "மை"க்கும் ஒரு எதிர்"மை" உண்டு!
மை வைப்பது கொஞ்சம் சங்கடம்தான். ஆனால் கூலிக்குக் கருப்புப் பணம் மாற்றித் தரும் மைக்ரோ ஹவாலா கும்பல் பல தீமைகளை ஒரே நேரத்தில் செய்கிறது. பதுக்கல்காரர்களின் கறுப்பை வெளுப்பாக்க கடுமையாக உழைத்துத் தருகிறார்கள். வேறு வேறு வங்கிகளில் வேறு வேறு அடையாள அட்டைகளுடன் திரும்பத் திரும்ப வரிசையில் நின்று நியாயமான காரணத்துக்கு பணம் எடுக்க வருபவர்களின் நேரத்தை வீணடிக்கிறார்கள். இது வங்கி ஊழியர்களின் வேலைப்பளுவையும் பல மடங்கு உயர்த்துகிறது. இதனால் தற்காலிகமாகவாவது வரிசைகள் குறையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதை ஒரு அவமானம் என்றெல்லாம் நான் பார்க்கவில்லை. அவமானப்பட வேண்டிய எத்தனையோ விஷயங்களில் தடித்த தோலுடன் இருந்துவிட்டதன் பலனைத்தான் இன்று அனுபவிக்கிறோம். அதே நேரம் ஏடிஎம்களின் தயாரிப்பு நிலையின்றி பண நீக்கத்தை அறிவித்து விட்டுத் தடுமாறுவது போல மை பற்றாக்குறையால் வங்கிகளில் பணம் பட்டுவாடா செய்யும் நடைமுறையை இது தடுமாறச் செய்யாமல் இருக்கவேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT