Published : 15 Nov 2022 06:34 AM
Last Updated : 15 Nov 2022 06:34 AM
சென்னை: பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைவதால், விவசாயிகள் பதிவு செய்துகொள்ளுமாறு தமிழகஅரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டு சம்பா, தாளடி, பிசான பருவ பயிர்களுக்கான காப்பீடு கடந்தசெப்.15-ம் தேதி பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் தொடங்கப்பட்டது. இதுவரை 11 லட்சம் விவசாயிகளால் 15.95 லட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வடகிழக்கு பருவ மழைபெய்துவரும் நிலையில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திருப்பூர், ஈரோடு,திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான அவகாசம் நவ.15-ம் தேதியுடன் (இன்று) முடிவடைகிறது. எனவே, இதுவரை நெற்பயிரை காப்பீடு செய்யாத, பயிர்க் கடன்பெற்ற விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும், பயிர்க் கடன் பெறாத இதர விவசாயிகள் அருகே உள்ள பொது சேவை மையங்களிலும் உரிய ஆவணங்களுடன் இத்திட்டத்தில் பதிவு செய்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT