Published : 15 Nov 2022 04:00 AM
Last Updated : 15 Nov 2022 04:00 AM
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த விளை நிலங்களை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பார்வையிட்டு, வீடுகள் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னரே, கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. கடந்த வாரம் இந்த மழையின் தீவிரம் அதிகரித்தது. இதனால் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று கடலூர் மாவட்டத்தில் மழை பாதிப்பு இடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். முதல்வர் நடத்திய இந்த ஆய்வின் போது, அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்,கே.என். நேரு, சி.வெ கணேசன்மற்றும் எம்எல்ஏக்கள் கோ.ஐயப் பன்,சபா ராஜேந்திரன், சிந்தனைச் செல்வன், கடலூர் மாவட்ட ஆட்சியர் கி. பாலசுப்பிரமணியம், கடலூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் எம்ஆர்கேபி. கதிரவன், சிதம்பரம் நகராட்சி தலைவர் செந்தில்குமார், அனைத் துத்துறை அரசு உயரதிகாரிகள், ஒன்றிய திமுக செயலாளர் சங்கர், நடராஜன், அண்ணாமலைநகர் பேரூராட்சி தலைவர் பழனி, சிதம்பரம் நகராட்சி கவுன்சிலர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு சந்திரசேகரன் உள்ளிளிட்ட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
வல்லம்படுகையில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் காவிரி பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர், அதன் தலைவர் இளங்கீரன் தலைமையில் மனு ஒன்றை அளித்தனர். அதில், “கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள, நெற் பயிர்களை காப்பாற்றிட யூரியா, பெட்டாஷ் உரங்களை மானியமாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
முழுவதும் பாதித்த வயல்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும். வீடுகள் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றிற்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும், உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், சீர்காழி, கொள்ளிடம் ஒன்றியப் பகுதியை பேரிடர் ஒன்றியமாக அறிவிக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
இதே போல தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவர் மதிவாணன் உள்ளிட்ட மற்ற விவசாய சங்கத்தினரும் இதே போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரிடம் மனு அளித்தனர். பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றிற்கு ரூ.50 ஆயிரம், உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment