Published : 14 Nov 2022 07:11 AM
Last Updated : 14 Nov 2022 07:11 AM
சென்னை: சென்னையில் நேற்று முன்தினம் ரவுடிகளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும்,வாகன தணிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. இதில், 698 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை நேரில் சென்று பார்த்து அவர்கள் தற்போது எந்தகுற்றச் செயல்களிலும் ஈடுபடாமல் உள்ளார்களா எனக் கண்காணிக்கப்பட்டது. அதுமட்டும் அல்லாமல் 24 ரவுடிகளிடம் திருந்திவாழ்வதற்கு நன்னடத்தை பிணை பத்திரம் பெறப்பட்டது. இதுதவிர சட்டம், ஒழுங்குக்கு குந்தகம் விளைவித்த 6 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஏற்கெனவே 467 சரித்திரப் பதிவேடு ரவுடிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளதுகுறிப்பிடத்தக்கது. இது மட்டுமின்றி 4,562 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. இதில் மது போதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 2 வாகனங்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறிய 47 வாகனங்கள் என மொத்தம் 49 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT