Published : 13 Nov 2022 12:21 PM
Last Updated : 13 Nov 2022 12:21 PM

பருவமழை பணிகள் | எதிர்க்கட்சிகளின் விமர்சனம் தேவையில்லை, பொதுமக்களின் பாராட்டே போதும்” - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை: பருவமழை பணிகள் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் விமர்சனம் தேவையில்லை, பொதுமக்களின் பாராட்டே போதும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சில நாட்களில் கனமழையும் பெய்தது. இதன் காரணமாக சென்னையில் ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கியது. இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பருவமழை காரணமாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கைப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.13) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சென்னை திரு.வி.க.நகர் மண்டல அலுவலகம், ஓட்டேரி நல்லா பாலம், ஸ்டீபன்சன் சாலை, பல்லவன் சாலை, பல்லவன் சாலை வீட்டுவசதி வாரியம், 70 அடி சாலையில் வண்ணான் குட்டை சந்திப்பு, கொளத்தூர் சட்டமன்ற அலுவலகம், வீனஸ் காலனியில் 100 அடி சாலை ஆகிய பகுதிகளை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எவ்வளவு மழை பெய்தாலும் அதை எதிர்கொள்ள அரசும், மாநகராட்சியும் தயார் நிலையில் உள்ளன. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு குடிநீர் வாரியம், பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளுடன் ஒருங்கிணைந்து அரசு சிறப்பாக செயல்பப்ட வருகிறது. பிரச்சனை ஒன்றும் இல்லை. எதிர்கட்சியினரின் விமர்சனங்களைக் கடந்து, பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். பொதுமக்கள் எங்களை பாராட்டினால் போதும்" இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x