Last Updated : 16 Nov, 2016 10:01 AM

 

Published : 16 Nov 2016 10:01 AM
Last Updated : 16 Nov 2016 10:01 AM

கூட்டுறவு சங்க விவசாயிகள் மிரர் அக்கவுன்ட் தொடங்க வேண்டும்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு

மத்திய அரசு கடந்த 8-ம் தேதி 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதனால் ஏற்பட்டுள்ள பண நெருக்கடியால் கூட்டுறவு கடன் சங்கங்கள், நிலவள வங்கிகளின் பரிவர்த்தனை முடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 4,654 தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள் எவ்வித சேவையும் செய்ய இயலாமல் பாதிக்கப்பட்டுள்ளன. மாவட்ட தொடக்க வேளாண்மை வங்கி நிதி உதவி செய்யும் வரையில் சங்கங்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கூட்டுறவு சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது, “2000-ம் ஆண்டுக்கு முன்னர் கூட்டுறவு கடன் சங்கங்களாக செயல்பட்டு வந்தவை. பின்னர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியாக மாறின. இதனை அறிந்த ரிசர்வ் வங்கி, ‘கூட்டுறவு சங்கங்கள் தங்களை வங்கிகள் என சொல்லிக்கொள்ளக் கூடாது’ என கட்டுப்பாடு விதித்ததால் தற்போது கடன் சங்கங்களாக செயல்பட்டு வருகிறது. முழுக்க முழுக்க விவசாயிகளையே நம்பி இந்த சங்கங்கள் இயங்கி வருகின்றன.

தற்போது மத்திய அரசின் அறிவிப்பால் பழைய ரூபாய் நோட்டுகளை வாங்கக் கூடாது என கூட்டுறவுத் துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. இத னால் எவ்வித சேவையும் செய்ய இயலாமல் உள்ளோம். இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப் பட்டு உள்ளனர்” என்றனர்.

விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு இணைப் பதிவாளர் சந்திரசேகரன் கூறும்போது, “கூட்டுறவுத் துறை யின் இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகள் அருகில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் மிரர் அக்கவுன்ட் (Mirror Account) தொடங்க வேண்டும். அதன் மூலம் பயிர்க் கடன், நகைக் கடன்களை மத்திய கூட்டுறவு வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம். இது தற் காலிகமானது. நிலைமை சீராகும் வரை இது தொடரும். பின்னர் வழக்கம்போல கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்கள் நகைக் கடன், பயிர் கடன் வழங்கலாம்” என்றார்.

விவசாயிகளுக்கான பயிர்க் கடன், நகைக் கடன் எப்படி கை யாளப்படுகிறது என, தேசிய உடைமையாக்கப்பட்ட வங்கிகளில் கேட்டபோது, “நகைக் கடன், பயிர்க் கடன் பெறும் விவசாயி யிடம் தொகையில் 10 சதவீதத்தை உடனே வழங்கிவிட்டு மீதியை அவரது கணக்கில் வரவு வைக் கிறோம்.

தேவைப்படும்போது அதனை அவர் ஏடிஎம் மூலமோ, வங்கியில் நேரடியாகவோ பெற்றுக்கொள்ளலாம்” என்றனர்.

‘மிரர் அக்கவுன்ட்’ என்றால் என்ன?

கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராக உள்ள ஒருவர் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி அல்லது நகர்ப்புற கூட்டுறவு வங்கியில் இணையான கணக்கு (பேரரல் அக்கவுன்ட்) தொடங்க வேண்டும். அதன் பெயர் மிரர் அக்கவுன்ட். இந்த கணக்கின் மூலம் கூட்டுறவு கடன் சங்கம் கொடுக்கும் ரசீதை காட்டி கூட்டுறவு வங்கிகளில் பணத்தை பெற்றுக்கொள்ளலாம். அதேபோல, சங்கத்துக்கு பணம் செலுத்த வேண்டியதாக இருந்தாலும், வங்கியில் பணம் செலுத்தி அந்த ரசீதை சங்கத்தில் சமர்ப்பித்தால் போதும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x