Published : 13 Nov 2022 04:45 AM
Last Updated : 13 Nov 2022 04:45 AM

தஞ்சாவூரில் கனமழை: ஒரே நாளில் 17 வீடுகள் இடிந்து சேதம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை இடைவிடாது மழை பெய்தது. இந்த மழையால் நேற்று ஒரே நாளில் குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள் என 17 வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் தம்பிக்கோட்டை வடகாடு கிராமத்தைச் சேர்ந்த கலா, மாரியம்மாள், ஒட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல், ஒரத்தநாடு வட்டம் ஊரணிபுரம் மூனுமாங்கொல்லை தெருவைச் சேர்ந்த ராஜா, அருமுளை கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் மற்றும் இளஞ்சியம், பேராவூரணி வட்டம் அடைக்கத்தேவன் கிராமத்தைச் சேர்ந்த ரத்தினம்,

பாபநாசம் வட்டம் ஒன்பத்துவேலி நாகலூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமிகாந்தன், கணேசன், அன்னப்பன்பேட்டை மாதாகோவில் தெருவைச் சேர்ந்த ராபின்சா, திருவிடைமருதூர் வட்டம் நரசிம்மன்பேட்டை மாதா கோவில் தெருவைச் சேர்ந்த திவ்யாராஜ், பந்தநல்லூரைச் சேர்ந்த நடராஜன், பாப்பாக்குடியைச் சேர்ந்த புகழேந்தி, மேலக்காட்டூரைச் சேர்ந்த அனுஷ்கா, சித்ரா ஆகியோரின் குடிசை வீடுகள் பகுதிஅளவும், சரபோஜிராஜபுரம் விளத்தொட்டியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தியின் குடிசை வீடு முழுமையாகவும் இடிந்து விழுந்துள்ளன.

பேராவூரணி வட்டம் ஊமத்தநாடு கிராமத்தைச் சேர்ந்த ராஜலட்சுமியின் ஓட்டு வீடு பகுதிஅளவு இடிந்துள்ளது. இதில், அதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கரையில் அதிகபட்சமாக 103.20 மில்லி மீட்டர் மழை பதிவானது. அதேபோல, பூதலூர் 94, மஞ்சளாறு 90, அய்யம்பேட்டை 83, தஞ்சாவூர் 81, திருக்காட்டுப்பள்ளி 74, திருவிடைமருதூர் 63, குருங்குளம் 61, அதிராம்பட்டினம் 54, கல்லணை 51, வல்லம் 50 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x