Published : 11 Nov 2016 09:59 AM
Last Updated : 11 Nov 2016 09:59 AM
ரூ.500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் களில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியை முன்கூட்டியே நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பழநி தண்டாயுத பாணி சுவாமி கோயில், திரு வண்ணாமலை அருணாச்சலேஸ் வரர் கோயில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் அதிக அளவில் உண்டி யல் காணிக்கை செலுத்துவார்கள். இது தவிர, உண்டியல் வருவாய் கிடைக்கக்கூடிய கோயில்கள் தமிழகத்தில் ஏராளமாக உள்ளன.
அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், ஒரு மாதம் முதல் 3 மாதம் என குறிப்பிட்ட கால இடை வெளியில் உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்படும். இதில் கிடைக்கும் வருவாய் கோயில் வங்கிக் கணக் கில் செலுத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த 9-ம் தேதி முதல் நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், இந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ள டிசம்பர் 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தங்களிடம் உள்ள பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கியில் செலுத்தி, செல்லத்தக்க பணமாக மாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள கோயில் உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் அப்படியே இருக்கிறது. சமீபத்தில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்ட கோயில் களில், மீண்டும் அடுத்த எண் ணிக்கை நடத்த 2 முதல் 3 மாதம் அவகாசம் இருக்கிறது. ஆனால், ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல் லாது என்ற பிரச்சினையால், அனைத்து கோயில் உண்டியல் களையும் டிசம்பருக்குள் திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் கூறும்போது, “இந்து அறநிலையத் துறை கோயில் கள் அரசின் கட்டுப்பாட்டில் இருப் பதால், உண்டியல்களில் இருக்கும் காணிக்கை பணத்தை மாற்றுவதில் சிக்கல் ஏற்படாது. எனினும், டிசம் பர் வரை மட்டுமே பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லும் என்பதால், அவற்றை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
உண்டியல் எண்ணிக்கை என் பது, இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் தரப்பில் எடுக் கப்படும் முடிவு. எனவே, இதற் கென பிரத்தேய உத்தரவை அரசு பிறப்பிக்காது. எனவே, அனைத்து கோயில்களிலும் முன்கூட்டிய உண்டியலைத் திறந்து, காணிக்கை யாக வந்த ரூபாய் நோட்டுகளில் ரூ.500, ரூ.1000 ஆகியவை இருந் தால் அவற்றை வங்கியில் செலுத்த முடிவு செய்துள்ளோம்” என்றனர்.
டிசம்பர் வரை மட்டுமே பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லும் என்பதால், அவற்றை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT