Published : 07 Nov 2022 06:27 PM
Last Updated : 07 Nov 2022 06:27 PM

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவருக்கு ஆறுதல் தெரிவித்த திருமாவளவன்; அரசு நிதியுதவி வழங்க கோரிக்கை

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: “தமிழக மீனவர்கள் மீது மத்திய அரசு எந்த அக்கறையும் செலுத்துவதில்லை. மீனவரின் உடல்நலம் கருதி தமிழக அரசு கூடுதல் நிதி அளிக்க வேண்டும்” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து தங்கு கடல் மீன் பிடித்துகொண்டிருந்த மீனவர்கள் மீது கோடியக்கரை ராமேஸ்வரம் இடையே வடக்கு கடல் பகுதியில் கடந்த 21ஆம் தேதியன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் படகில் இருந்த மயிலாடுதுறை வானகிரி பகுதியை சேர்ந்த மீனவர் வீரவேல் (30) என்பவருக்கு இடது இடுப்பு மற்றும் வயிற்று பகுதியில் 5 துப்பாக்கி குண்டு சிதறல்கள் பாய்ந்ததில் படுகாயம் அடைந்தார். இவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவரை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”இந்தியக் கடற்படையினரின் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மீனவர் வீரவேலுவை சந்தித்தேன். நல்ல உடல்நலத்துடன் உள்ளார். அவர் மீன்பிடிக்க முடியாத நிலையில் உடல்நிலை உள்ளதால் மீனவர் வீரவேலின் குடும்பத்திற்கு கூடுதல் நிதி அளிக்க வேண்டும். அவருக்கு மாற்றுத்தொழிலாளுக்கான உதவியை அறிவிக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் மீது மத்திய அரசு எந்த அக்கறையும் செலுத்துவதில்லை. இலங்கை கப்பற்படையினர் நடத்திவரும் தாக்குதல்களை கண்டிக்கிறோம்.

மனுஸ்மிருதியில் நாங்கள் எதையும் திணிக்கவில்லை, மனுஸ்மிருதியை புனித நூலாக கருதியவர்கள் எழுதிய நூல்களை வழங்கியுள்ளோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x