Published : 04 Nov 2016 09:06 AM
Last Updated : 04 Nov 2016 09:06 AM
தமிழக அரசு முதன்முறையாக மத்திய அரசு மானியத்துடன் குறைந்த வருவாய் பிரிவினருக்கு ரூ.20 லட்சத்தில் சென்னையில் 2 படுக்கையறை வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டித் தருகிறது.
19 மாடிகளைக் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 2 ஆயிரத்து 394 வீடுகள் கட்டப்படுகின்றன. இதுவரை ஆயிரம் பேர் வீடுகளை வாங்கிவிட்டனர். தமிழகத்தில் சாதாரண மக்கள் வாங்க முடியாத அளவுக்கு வீடு விலை அதிகமாக இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு, ‘குறைந்த வருவாய் பிரிவினருக்கு குறைந்த விலையில் வீடுகள் கட்டித் தரப்படும்’ என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதன்படி, சென்னை அம்பத் தூர் அருகேயுள்ள அயப்பாக்கத் தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ரூ.435 கோடியில் 11 ஏக்கரில் 11 பிளாக்குகளுடன் 19 மாடிகள் கொண்ட குடியிருப்பைக் கட்டி வருகிறது. இங்கு மொத்தம் 2 ஆயிரத்து 394 அடுக்குமாடி வீடுகள் கட்டப்படுகின்றன.
இங்கே வீடு வாங்குவோருக்கு ‘பிரதமரின் அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் கீழ் கடன் மானியமாக ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் கிடைக்கும். மீதமுள்ள ரூ.17 லட்சத்து 80 ஆயிரம் செலுத்தினால் போதும். சென்னைக்கு அருகில் 631 சதுர அடியில் 2 படுக்கையறை வீடு வழங்கப்படுவதும், மத்திய அரசு மானியத்துடன் கிடைப்பதும் இதுவே முதல்முறை.
இந்த திட்டத்தில் வீடு வாங்குவோரின் ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். வாங்குபவரின் பெயரிலோ, அவரது மனைவி பெயரிலோ அல்லது அவர்களது குழந்தைகள் பெயரிலோ தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி இருக்கக்கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இவ்வளவு குறைந்த விலையில் வீடு வழங்குகின்ற போதிலும் எதிர்பார்த்த வரவேற்பு இல்லையே என்று மக்களின் மனநிலை குறித்து ஆய்வு மேற்கொண்டது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம். தற்போது வீடு கட்டுமானம் நடக்கும்போதே வங்கிக் கடன் வாங்கி வீடு வாங்கினால் உடனடியாக வங்கி தவணை செலுத்த வேண்டும்.
தற்போது குடியிருக்கும் வீட்டுக்கும் வாடகை தர வேண்டும். அதுவே வீடு கட்டி முடித்த பிறகு வாங்கினால் சொந்த வீட்டில் குடியேறலாம் அல்லது வீட்டை வாடகைக்கு விட்டு அத்தொகையை வங்கி தவணையாக செலுத்தலாம் என்று பொதுமக்கள் திட்ட மிடுவதே காரணம் என்று தெரிய வந்துள்ளது.
“2016-ம் ஆண்டு பிப்ரவரி முதல் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இது வரை 45 சதவீத பணிகள் முடிந் துள்ளன. அதாவது 9 மாடிகள் கட்டப்பட்டுள்ளன. மீதமுள்ள பணி களை 2018-ம் ஆண்டு பிப்ரவரியில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இடைப்பட்ட காலத்தில் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந் தாலும் அதற்கேற்ப வீட்டின் விலை உயர்த்தப்படமாட்டாது என்று வாரியம் திட்டவட்டமாக அறிவித்திருப்பதே மக்களின் மேற்கண்ட முடிவுக்கு முக்கியக் காரணம்” என்று தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அதிகாரி ஒருவர் கூறினார்.
இதுபோல சோழிங்கநல்லூரில் குறைந்த மற்றும் நடுத்தர பிரிவின ருக்காக 2 ஆயிரம் வீடுகளைக் கட்ட வாரியம் திட்டமிட்டிருக்கிறது.
இதில், குறைந்த வருவாய் பிரிவினருக்கான அடுக்குமாடி வீடு ரூ.20 லட்சம் என்றும் நடுத் தர வருவாய் பிரிவினருக்கான அடுக்குமாடி வீடு ரூ.30 லட்சம் என் றும் விலை நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT