Published : 30 Nov 2016 10:06 AM
Last Updated : 30 Nov 2016 10:06 AM
இந்தியாவில் காய்கறிகள், பழங் கள் உற்பத்தி ஆண்டுதோறும் அதிகரித்தும், சத்துள்ள உணவு கிடைக்காமல் 12 முதல் 15 சத வீதம் பேர் இறப்பதாக 2015-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்திய மருத்துவக் கழக ஆய்வில் குறிப் பிடப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது.
77.716 டன் காய்கறிகள் உற்பத்தி
சர்வதேச அளவில் இந்தியா காய்கறிகள் உற்பத்தியில் 2-ம் இடத்தில் உள்ளது. 2015-16-ம் ஆண்டில் 166.61 மில்லியன் டன் காய்கறிகள் உற்பத்தி செய்யப் பட்டுள்ளன. தமிழகத்தில் 2.907 லட்சம் ஹெக்டேரில் 77.716 டன் காய்கறிகள் உற்பத்தி செய்யப் படுகின்றன. காய்கறி உற்பத்தியில் தமிழ்நாடு 9-வது இடத்தில் உள்ளது.
20-30% வீணாகின்றன
காய்கறிகள், பழங்கள் உற்பத் தியில் அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பங்கள், மதிப்பூட்டப் பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட விழிப்புணர்வு, இன்னமும் விவசாயிகள், தொழில் முனைவோர் மற்றும் வியாபாரிகள் மத்தியில் ஏற்படாததால் உண் பதற்கு முன்பே 20 முதல் 30 சதவீதம் காய்கறி, பழங்கள் வீணாகின்றன.
இதுகுறித்து மதுரை மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பூபதி கூறிய தாவது: அறுவடைக்குப் பின் ஏற் படும் சேதாரத்தைக் குறைக்க காய்கறிகளைச் சரியான முதிர்ச்சி யில் அறுவடை செய்வதும், அறு வடைக்குப் பிந்தைய முறையான தொழில்நுட்பங்களைக் கையாளு வதும் அவசியமாகும்.
மனிதர்களுடைய உயிரிழப்பு களுக்கு விபத்து, நோய், முதுமை உள்ளிட்ட நிறைய காரணங்கள் இருக்கின்றன. இதில் தற்போது சரியான சத்துள்ள உணவு கிடைக் காமல் இறப்பதும் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் காய்கறிகள் சாகுபடி பரப்பு, உற்பத்தி ஒருபுறம் ஆண்டுதோறும் அதிகரித்தாலும், மற்றொருபுறம் சரியான சத்துள்ள உணவுகள் கிடைக்காமல் 12 முதல் 15 சதவீதம் பேர் இறப்பதாக 2015-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்திய மருத்துவக் கழக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சராசரியாக மனிதன் ஒரு நாளைக்கு 400 கிராம் காய்கறிகள், 100 கிராம் பழங்கள் உண்ண வேண்டும். ஆனால், பழங்கள், காய்கறிகளை 100 முதல் 150 கிராம் அளவிலேயே தற்போது மக்கள் சாப்பிடுகின்றனர். ஆனால், ஒரு மனிதனுக்கு 150 கிராம் பழங்கள், 350 முதல் 400 கிராம் காய்கறிகள் என்ற அளவில் தேவையைவிட கூடுதலாகவே காய்கறிகள், பழங்கள் உற் பத்தி செய்யப்படுகின்றன. காய்கறிகள், பழங்கள் உற்பத்தி அதிகமாக இருந்தும் அதை எடுத்துக்கொள் வது குறைவாகவே இருக்கிறது.
1979-ம் ஆண்டு தமிழ்நாட்டில் 6 லட்சமாக இருந்த விவசாய சாகுபடி பரப்பு, தற்போது 12 லட்சமாக அதிகரித்துள்ளது. அதுபோல் காய்கறிகள், பழங்கள் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. சரியான விலை கிடைக்காமல், அவை அழுகி வீணாவதால் விவசாயிகள் நஷ்டமடைவதும், சத்துள்ள உணவு கிடைக்காமல் உயிரிழப்பு ஏற்படுவதும் தொடர் கிறது. இதற்கு அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பங்களைப் பின்பற்றாததே முக்கிய காரணம் என்றார்.
தோட்டக்கலைத் துறை சொல்லும் தீர்வு என்ன?
தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பூபதி கூறியதாவது: காய்கறிகள் தானியங்களைப்போல் அல்லாமல் அதிகப்படியான தண்ணீரை கொண்டுள்ளதால் நுண்ணுயிர்களும், நொதிகளும் அதிகமாகத் தாக்குகின்றன. இந்த காய்கறிகள், பழங்களைச் சரியான முறையில் கையாளாவிட்டாலும் சேதாரம் நேரிடும். அறுவடைக்குப் பிறகு சரியான தொழில்நுட்பங்களை உரிய நேரத்தில் கடைபிடித்தால் சேதாரத்தைக் குறைக்கலாம்.
அறுவடை செய்த பழங்கள், காய்கறிகளைப் பதப்படுத்துதல், மெருகேற்றுதல், தரம் பிரித்தல், தண்ணீரில் கழுவுதல், சுத்தப்படுத்துதல், அதில் இருந்து மதிப்புக்கூட்டிய உணவாக மாற்றுதல், விளைநிலத்தில் இருந்து நுகர்வோர் வரையிலான சங்கிலி பிணைப்பை செம்மையாக்குதல் போன்ற அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பங்களைப் பின்பற்றலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT