Published : 05 Nov 2016 10:08 AM
Last Updated : 05 Nov 2016 10:08 AM

ஒருமணி நேரத்தில் 20,000 லிட்டர் நீர் இறைக்கும் கைவிசை இயந்திரம்: விவசாயியின் கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்குமா?

திருவாரூர் மாவட்டம் நன்னிலத் தைச் சேர்ந்தவர் விவசாயியான நா.சக்தி மைந்தன்(57). இவர் கடந்த 2007-ம் ஆண்டு கைவிசை நீர் இறைப்பு இயந்திரம் ஒன்றை வடிவமைத்தார். இதனை குஜராத்தில் உள்ள தேசிய அறிவியல் கண்டு பிடிப்பு மையம் ஆய்வுசெய்து, ஒருமணி நேரத்தில் 20 ஆயிரம் லிட் டர் தண்ணீரை ஓரிடத்தில் இருந்து வேறு இடத்துக்கு இறைக்க முடியும் என சான்றளித்தது.

அதன் பலனாக, 2007-ல் டெல்லியில் நடைபெற்ற அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி கண்காட்சியில் இந்த இயந்திரம் இடம் பெற்றது. அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இந்த கண்காட்சியில் கலந்துகொண்டு, சிறந்த 70 படைப்புகளைத் தேர்வு செய்து சான்றளித்ததுடன், மத்திய அரசு வெளியிட்ட குறிப்பிலும் வெளியிடச் செய்தார்.

அதன்பிறகு, குடியரசுத் தலைவர் மாளிகையில் 2011-ல் நடைபெற்ற கண்காட்சியில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில், சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 98-வது அறிவியல் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங், 2016 மார்ச் மாதத்தில் மீண்டும் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி யில் தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் இவரது இயந்திரத்தைப் பார்த்து வியந்துள்ளனர்.

இந்நிலையில், தேசிய கண்டு பிடிப்பு மையம் சக்தி மைந்தனுக்கு ரூ.2.70 லட்சம் நிதியுதவி அளித்தது. அந்த நிதியில், உபகரணங்கள் சிலவற்றை வாங்கி, 5 இயந்திரங் களைத் தயார் செய்ய திட்டமிட்டு பணிகளைத் தொடங்கினார். நிதிப் பற்றாக்குறையால் முழுமையாக முடிக்க முடியாமல் விரக்தியடைந்து அந்தப் பணியை கிடப்பில் போட்டுவிட்டார்.

இதுகுறித்து சக்தி மைந்தன், கூறியதாவது:

நான் 5-ம் வகுப்பு வரை படித் தேன்.வறுமை காரணமாக, எனது கைவிசை நீர் இறைப்பு இயந்தி ரத்தை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுசெல்ல முடியவில்லை. தற்போது நன்னிலம் சங்கீத காளியம்மன் கோயிலில் பூசாரியாக வேலை செய்து வருகிறேன். எனது சொந்த வீட்டைச் சீரமைக்க வசதி இல்லாமல் வாடகை வீட்டில் மனைவியுடன் வசித்து வருகிறேன். முற்றிலும் பழுதடைந்த அந்த வீட்டில், திருமணமாகாத தம்பியும் தங்கையும் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டிய பொறுப்பும் எனக்கு உள்ளது.

நீர் இறைப்பு இயந்திரத்தை இயக்கிக் காட்டும் சக்தி மைந்தன்.

படங்கள்: எஸ்.கோபாலகிருஷ்ணன்

எனக்குக் கிடைத்த உதவித் தொகை மூலம், மேலும் நீர் இறைக் கும் இயந்திரங்களைத் தயாரிக்க முற்பட்டேன். ஆனால், நிதிப் பற் றாக்குறையால் பணியைத் தொடர முடியவில்லை. நிறைவுபெறாத இயந்திர பாகங்கள் ஓராண்டுக்கு மேலாக தூசி படிந்து கிடக்கின்றன.

மத்திய அரசு அதிகாரிகள் என் னைப் பாராட்டியதுடன், காப்புரி மைக்கு விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவித்தனர்.

ஆனால், 9 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் காப்புரிமை சான்று குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை.

இதனிடையே, பல்வேறு அறிவி யல் கண்காட்சிகளில் பள்ளி, கல் லூரி மாணவர்கள் எனது கண்டு பிடிப்பைச் செய்துகாட்டி பரிசு பெற்றுவருவது மகிழ்ச்சியளிக் கிறது. ஆனாலும், என் பெயர் மறைக்கப்பட்டு வேறு நபர்களின் கண்டுபிடிப்பாக அது பதிவிடப்பட்டு வருவது கவலையளிக்கிறது.

இந்த இயந்திரத்தை விவசாயத் துக்கு மட்டுமின்றி மழைக்காலத்தில் சாலைகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்றவும் பயன்படுத்த முடியும். இயந்திரத்தின் பயனை உணர்ந்த தமிழக அரசு, கடந்த அக்டோபர் மாதம் 19-ம் தேதி வேளாண்மை பொறியியல் துறை மூலம் மானியத்துக்கு நட வடிக்கை எடுப்பதாக கடிதம் அனுப்பியிருப்பது மகிழ்ச்சியளிக் கிறது. ஆனால், அதனை விரைந்து செய்ய வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x