Last Updated : 11 Nov, 2016 12:28 PM

 

Published : 11 Nov 2016 12:28 PM
Last Updated : 11 Nov 2016 12:28 PM

பெரியாறு அணை பகுதியில் 16 ஆண்டுகளாக கேட் அமைக்க எதிர்ப்பு: கேரளத்துக்கு தமிழக விவசாயிகள் கண்டனம்

பெரியாறு அணை பகுதியில் இரும்பு கேட் அமைக்க கேரள அரசு அதிகாரிகள் கடந்த 16 ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருவதற்கு தமிழக விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முல்லை பெரியாறு அணையில் 152 அடியாக நீர்தேக்க விடாமல் கேரள அரசு பல்வேறு வகையில் முட்டுக்கட்டை ஏற்படுத்தி வரு கிறது. அணைப் பகுதியில் கேரள அமைச்சர், எம்எல்ஏ, அம் மாநில அரசு அதிகாரிகள் அத்துமீறி நுழைவதை தடுக்க இரும்பு கேட் (நுழைவு வாயில்) அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதாவது தேக்கடி படகு துறையில் ரூ.4.50 லட்சம் மதிப்பில் 2, அணைப் பகுதியில் 2, ஷட்டர் பகுதியில் 1 என மொத்தம் 5 இடங்களில் இரும்பு கேட் அமைக்க திட்டமிட்டு இரும்பு கேட்டுகள் தயாரிக்கப்பட்டன. இதை கடந்த மார்ச் மாதம் தமிழக பொதுப்பணித் துறை தொழிலாளர்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது இடுக்கி மாவட்ட ஆட்சியர் கவுசிகன், மாவட்டக் காவல் கண்காணி ப்பாளர் வர்கீஸ் தலைமையிலான அதிகாரிகள், காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று கேட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இப்பணி பாதியில் நிறுத் தப்பட்டது. இதற்கிடையில் அணை பகுதியில் அமைந்துள்ள காவல் நிலையம் வல்லக்கடவுக்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி தற்போது இரும்பு கேட் அமைக்க தமிழக பொதுப்பணித் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஆனால், கேரள அரசு அதிகாரிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால், கேட் அமைக்க முடியாமல் தமிழக பொதுப்பணித் துறையினர் அதிரு ப்தி அடைந்துள்ளனர்.

இது குறித்து ‘தி இந்து’விடம் தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், பெரியாறு, வைகை 5 மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் கே.எம்.அப்பாஸ் ஆகியோர் கூறியதாவது:

அணை பகுதியில் மனிதர்கள், வன விலங்குகள் நுழைவதை தடுக்க பிரதான (பெரியாறு) அணையில் இருந்து பேபி அணைக்குச் செல்லும் பாதையில் 1946-ம் ஆண்டு மற்றும் 1956-ம் ஆண்டில் 2 இரும்பு கேட், படகுத் துறையில் 1945-ம் ஆண்டு ஒரு கேட் என மொத்தம் 3 கதவுகள் அமைக்கப்பட்டன. இவற்றை காட்டு யானைகள் தாக்கி சேதப்படுத்தின.

இதையடுத்து 2001-ம் ஆண்டு ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த அதே இடத்தில் புதிதாக கேட் அமைக்க பொதுப்பணித் துறை யினர் முயன்றபோது கேரள அதிகாரிகள் தடுத்தனர். இதனால் பணி நடைபெறவில்லை. தற் போதும் தடுத்து வருகின்றனர். கடந்த 16 ஆண்டுகளாக கேட் அமைக்க விடாமல் தடுத்து வரும் கேரள அரசு அதிகாரிகளின் செயல் கண்டனத்துக்குரியது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x