Published : 02 Nov 2022 04:44 PM
Last Updated : 02 Nov 2022 04:44 PM
சென்னை: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களை வைத்திருக்கும் தனிநபர் மற்றும் தனியார் நிறுவனங்கள், அதுகுறித்த தகவலை தெரிவிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று ஆவணங்கள் நமது தேசிய பாரம்பரியத்தை எடுத்து கூறுவதாக உள்ளதால், இவற்றினை தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி நிறுவனம் பாதுகாக்க திட்டமிட்டு உள்ளது. அவற்றினை, முறையாக சரிசெய்து கணினிமயமாக்குவதன் வாயிலாக நம் கலாசாரம் மற்றும் பராம்பாரியத்தின் அடிச்சுவடு மாறாமல் பாதுகாத்திட இயலும்.
சென்னை மாவட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள், மடங்கள், சர்ச், மசூதி மற்றும் தனியார் நிறுவனங்கள், தனி நபர்களிடம் இருந்தால், அதன் விவரத்தினை 044 - 25228025 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். அல்லது collrchn@nic.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT