Last Updated : 29 Nov, 2016 08:37 AM

 

Published : 29 Nov 2016 08:37 AM
Last Updated : 29 Nov 2016 08:37 AM

புதிதாக ஏற்றுமதி தொழிலில் ஈடுபடும் தொழில் முனைவோருக்கு இலவச பயிற்சி திட்டம்: இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் அறிமுகம்

புதிதாக ஏற்றுமதி தொழிலில் ஈடுபடும் தொழில்முனைவோருக்கு ஏற்றுமதி குறித்து அறிந்து கொள்வதற்காக இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் இலவச பயிற்சி அளிக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மாநி லங்களில் விளையும் மற்றும் உற்பத்தி செய்யப்படும் பொருட் கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு ஏற்றுமதி செய்பவர்களுக்கு தேவையான உதவிகளை இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் செய்து தருகிறது.

இந்நிலையில், புதிதாக ஏற்றுமதி தொழிலில் ஈடுபடும் தொழில் முனைவோர்களுக்கு ஏற்றுமதி குறித்து அறிந்து கொள்வதற் காக இலவச பயிற்சி அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட் டுள்ளது.

இதுகுறித்து, இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (தென் மண்டலம்) தலைவர் டாக்டர் ஏ.சக்திவேல் கூறியதாவது:

இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் கடந்த 1965-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. நாட்டில் உள்ள ஒரு லட்சம் ஏற்றுதிமதியாளர்க ளுக்கு நேரடியாகவும், மறைமுக மாகவும் உதவிபுரிந்து வருகிறது.

தமிழகத்தில் இருந்து விவசாய பொருட்கள், தோல் பொருட்கள், ரசாயனம், அழகு சாதனப் பொருட்கள், ஜவுளிகள் மற்றும் ஆயத்த ஆடைகள், கைவினைப் பொருட்கள், கம்ப் யூட்டர் சாப்ட்வேர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பொருட்கள் நாட்டின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. நாட்டின் மொத்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு 13 சதவீதமாக உள்ளது. போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில் தற்போது இளைஞர்கள் மத்தியில் தொழில்முனைவோராக ஆகும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதற்காக அவர்கள் துணிந்து பல்வேறு தொழில்களில் ஈடுபடுகின்றனர்.

ஆனால், அவர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை எவ்வாறு சந்தைப்படுத்த வேண்டும் என்பது குறித்து அறிந் திருக்கவில்லை. அதிலும் குறிப்பாக வெளிநாடுகளுக்கு எவ்வாறு ஏற்றுமதி செய்வது என்பது தெரியவில்லை. இதனால் அவர்களுடைய உற்பத்திப் பொருட்கள் உள்நாடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்படுகிறது.

இக்குறையைப் போக்கும் விதத்தில் இந்திய ஏற்றுமதி மேம் பாட்டு ஆணையம் புதிதாக ஏற்றுமதி செய்ய விரும்பும் தொழில்முனைவோருக்கு இலவச ஏற்றுமதி குறித்த பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மூன்று நாட்கள் நடைபெறும் இப்பயிற்சியில் ஏற்றுமதி செய்ப வர்களின் பொருட்களுக்கு எந்த நாட்டில் சந்தை வாய்ப்பு உள்ளது, உற்பத்தி செய்யப்படும் பொருட்களை எவ்வாறு மதிப்புக் கூட்டி தயாரிப்பது, வங்கிகள் மூலம் அவர்களுக்கு தேவை யான நிதியுதவி பெற உதவி செய்தல் உள்ளிட்டவை குறித்து விளக்கப்படும்.

மேலும் தேவைப்பட்டால் வெளி நாடுகளில் நடைபெறும் தொழில் முனைவோர் உற்பத்தி செய்யும் பொருட்களின் கண்காட்சிக்கு அழைத்துச் செல்லப்படுவர். இது தொடர்பாக கூடுதல் விவரங்கள் பெற விரும்புவோர் சென்னையில் உள்ள எங்கள் அலுவலகத்துக்கு 044-28497766/ 28497755 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம்.

இவ்வாறு சக்திவேல் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x