Published : 02 Nov 2022 04:35 AM
Last Updated : 02 Nov 2022 04:35 AM
மதுரை: மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாட்டின் பண்பாடு, பாரம்பரியம் மிக்க வரலாற்று சிறப்பு மிக்க சுற்றுலா தலங்களை கண்டுகளிக்க, பாரத் கவுரவ் என்ற ஆன்மிக சுற்றுலா ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அனுபவம் வாய்ந்த சுற்றுலா நிறுவனம் மூலம் இதுவரை 6 ஆன்மிக சுற்றுலா ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கி உள்ளது. இதன் மூலம் ரூ. 6.3 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 7-வது ஆன்மிக சுற்றுலா ரயில், மதுரை கூடல்நகர் - பஞ்சாப் அமிர்தசரஸ் ரயில் நிலையங்களிடையே இயக்கப்படுகிறது.
இதன் மூலம் தெலங்கானா மௌலாளி, ஜெய்பூர், ஆக்ரா, அமிர்தசரஸ், கோவா போன்ற சுற்றுலா தலங்கள் இணைக்கப்படும். கூடல்நகர் - அமிர்தசரஸ் - கூடல்நகர் சுற்றுவட்ட சுற்றுலா ரயில் (06905/06906) கூடல்நகரில் இருந்து நாளை மறுநாள் (நவ.4) இரவு 7.40 மணிக்கு புறப்படுகிறது.
நாகர்கோவில், திருவனந்தபுரம், பாலக்காடு, போத்தனூர், சேலம், காட்பாடி வழியாக நவ. 6 மவுலாளி, நவ. 8 ஜெய்ப்பூர், நவ. 9-ல் ஆக்ரா, நவ.10-ல் புதுடில்லி, நவ.11-ல் அமிர்தசரஸ், நவ.13-ல் கோவா ஆகிய இடங்களுக்குச் செல்கிறது. பின்னர் மங்களூரு, திருச்சூர், கொல்லம், திருவனந்தபுரம், நாகர்கோவில் வழியாக நவ.16-ல் அதிகாலை 2.30 மணிக்கு கூடல்நகர் வந்து சேருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT