Published : 02 Nov 2022 04:05 AM
Last Updated : 02 Nov 2022 04:05 AM
கடலூர்: வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் முதல் பெய்யத் தொடங் கிய மழை நேற்று காலை வரை நீடித்தது.
கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், பரங்கிப்பேட்டை, சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில், பரங்கிப் பேட்டை, அண்ணாமலைநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளி லும் மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ் வான இடங்களில் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது. மாவட்டத்தில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தொடர் மழையால் கடலூர் சுற்றுலா மாளிகை முகப்பு பகுதியில் உள்ள மரத்தில் இருந்து பெரிய கிளைகள் சாலையில் விழுந்தன. அப்பகுதியில் இருந்த மக்கள் அலறியடித்து ஓடினர். யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பினன்ர் மரக்கிளை அகற்றப்பட்டது.
நேற்றைய மழையளவு: பரங்கிப்பேட்டையில் 36 மிமீ, அண்ணாமலை நகரில் 27.2 மிமீ, கடலூரில் 21 மிமீ, சிதம்பரத்தில் 19.2 மிமீ, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 18.2 மிமீ, புவனகிரியில் 14மிமீ, பண்ருட்டியில் 11.2 மிமீ, குறிஞ்சிப்பாடியில் 8 மிமீ, காட்டுமன்னார் கோவிலில் 5 மிமீ மழை பதிவானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT