Published : 01 Nov 2022 01:14 PM
Last Updated : 01 Nov 2022 01:14 PM
சென்னை: சென்னையில் நேற்று இரவு தொடங்கி பெய்துவரும் மழையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.
சென்னையில் நேற்று (அக 31) இரவு தொடங்கி இன்று வரை கனமழை பெய்து வருகிறது. இதன்படி கடந்த 24 மணி நேரத்தில் பெரம்பூர் மாநகராட்சி பூங்கா பகுதியில் 12 செ.மீ, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதியில் 10 செ.மீ, தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனை பகுதியில் 9.8 செ.மீ, அயனாவரம் பகுதியில் 9.4 செ.மீ, நுங்கம்பாக்கம் பகுதியில் 8 செ.மீ, டிஜிபி அலுவலக பகுதியில் 7.2 செ.மீ, எம்ஜிஆர் நகர் பகுதியில் 6.6 செ.மீ, அம்பத்தூர் பகுதியில் 5.2 செ.மீ, அண்ணா பல்கலைக்கழக பகுதியில் 4.6 செ.மீ, ஆலந்தூர் பகுதியில் 3 செ.மீ, சோழிங்கநல்லூர் பகுதியில் 4 செ.மீ மழை பதிவாகி உள்ளது. குறிப்பாக கடந்த 72 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் கனமழை பதிவாவது ( 8 செ. மீ ) இது மூன்றாவது முறை ஆகும் .
இதன் காரணமாக சென்னையில் ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதன்படி கே.கே.நகர், அசோக் நகர் 6 வது அவின்யூ, ஜிபி சாலை, புளியந்தோப்பு, டிகாஸ்டர் சாலை, டிமெல்லோஸ் சாலை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை , பட்டாளம், சூளை மேடு, 25 வார்டு 200 அடி சாலை, நீலாங்கரை கபாலீஸ்வரர் சாலை, 195 வார்டு ஈஞ்சம்பாக்கம் ராஜன் நகர், 200 வார்டு ஜவகர் நகர், 198 விப்ரோ தெரு, 193 வார்டு சக்தி நகர் துரைபாக்கம், 168 வார்டு தனகோடி ராஜ தெரு உள்ளிட்ட சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT