Published : 30 Oct 2022 05:52 AM
Last Updated : 30 Oct 2022 05:52 AM
சென்னை: பண்பாடு, கலாச்சாரத்தை மீட்டெடுக்க வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
சமண துறவி ஆச்சார்யா ஸ்ரீதுளசியின் 109-ம் ஆண்டு பிறந்தநாள் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:
இந்தியா தனித்துவ நாடு
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியா மதச்சார்பற்ற நாடாக உள்ளது. இந்தியா தனித்துவமான நாடு. ஆனால் இன்னும் முன்னேற்றம் அடையாமல் உள்ளது. அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளை ஒப்பிடும்போது மனித சக்தி குறைவாக உள்ளது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தின் போது, நம்முடைய பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றை அழித்துவிட்டார்கள். அதை மீட்டெடுக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் உள் ளோம்.
தற்போது ஆயுதங்கள் ஏந்தும் சில நாடுகள் அழிவுக்கான ஆபத்துகளை உருவாக்கி வருகின்றன. சில நாடுகளின் மீது அவநம்பிக்கை, சமூக ஒழுங்கின்மை போன்றவை ஏற்பட்டுள்ளதால் தற்போது உலகமே பெரும் குழப்பத்தில் உள்ளது.
இந்தியா என்பது ரிஷிகள் மற்றும் முனிவர்களின் ஆன்மிக சிந்தனையில் உருவானது. அவர்களின் வாழ்வு மற்றும் கருத்துகளை நாம் பின்பற்ற வேண்டும். இது இந்தியாவின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, மனிதத்தையும் வளர்க்க உதவும்.சுவாமி விவேகானந்தர், ஆச்சார்யா ஸ்ரீதுளசி போன்ற துறவிகள் வழியில் நாம் நடக்க வேண்டும்.
இவ்வாறு ஆளுநர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT