Last Updated : 27 Oct, 2022 11:45 PM

 

Published : 27 Oct 2022 11:45 PM
Last Updated : 27 Oct 2022 11:45 PM

தேவர் குருபூஜை விழா | வெளிமாவட்ட வாகனங்கள் வந்து செல்லும் வழித்தடங்கள் - ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

ராமநாதபுரம்: பசும்பொன் தேவர் குருபூஜை விழாவிற்கு வெளிமாவட்ட வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே பசும்பொன் வந்து திரும்பிச் செல்ல வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள அறிக்கையில், "ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் அக்.28 முதல் 30-ம் தேதி வரை முத்துராமலிங்கத்தேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குருபூஜை விழா நடைபெறுகிறது. இவ்விழாவை முன்னிட்டு பசும்பொன்னிற்கு மரியாதை செலுத்த வருவோர் வாடகை வாகனங்களில் வரக்கூடாது. மேலும் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே வெளிமாவட்டங்களில் இருந்தும், ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்தும் வருவோர் வந்து செல்ல வேண்டும்.

வெளிமாவட்ட வாகனங்கள் பசும்பொன் வந்து செல்லும் வழித்தடங்கள்:

மத்திய மண்டல வாகனங்கள்: திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வாகனங்கள் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும். இந்த மாவட்ட வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக ராமநாதபுரம் நோக்கி வரக்கூடாது.

வடக்கு மண்டல வாகனங்கள்: சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வாகனங்கள் திருச்சி, மதுரை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும்.

மேற்கு மண்டல வாகனங்கள்: கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வாகனங்கள் திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும்.

மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள்: மதுரை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும். தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள், அருப்புக்கோட்டை, எம்.ரெட்டியபட்டி, மண்டபசாலை, க.விலக்கு, கண்ணார்பட்டி, கமுதி வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும் அல்லது தூத்துக்குடி, சூரங்குடி, சாயல்குடி, கோவிலாங்குளம், கமுதி வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும்.

விருதுநகர் மாவட்டத்திலிருந்து வரும் வாகனங்கள்: அருப்புக்கோட்டை, எம்.ரெட்டியபட்டி, மண்டபசாலை, க.விலக்கு, கண்ணார்பட்டி, கமுதி வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும். சிவகங்கை மாவட்டத்திலிருந்து வரும் வாகனங்கள், சிவகங்கை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x