Published : 26 Nov 2016 09:46 AM
Last Updated : 26 Nov 2016 09:46 AM

ஐடி ஊழியரை குறிவைக்கும் ஆன்லைன் நில வணிக விளம்பரம்: சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எச்சரிக்கை

பண மதிப்பு நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து பிளாட்கள், அடுக்குமாடி வீடுகள் உள்ளிட்ட சொத்துகளை தள்ளுபடி விலையில் தருவதாக தற்போது ஏராளமான ஆன்லைன் விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. இவற்றின் பின்புலத்தை ஆராயாமல் சொத்துகளை வாங்க வேண்டாம் என எச்சரிக்கிறார் சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் கே.அழகுராமன்.

நில வணிகத்தில் பெரும் பகுதி கறுப்புப் பணப் புழக்கம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு நில வணிகத் தொழில் முடங்கிப் போயிருப்பதற்கு இது வும் ஒரு முக்கியக் காரணம். இந்நிலையில், கடந்த சில தினங் களாக கண்ணைக் கவரும் படங் களுடன் பிளாட்கள், அடுக்குமாடி வீடுகள் தள்ளுபடி விலையில் விற்பனைக்கு உள்ளன. லீகல் ஒப்பீனியன், வில்லங்க சான்றுகள் இலவசமாக பெற்றுத் தரப்படும் என்று ஆன்லைனில் விளம்பரங்கள் வெளியாகி வருகின்றன.

இந்த விளம்பரங்கள் குறித்து ‘தி இந்து’விடம் பேசிய சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் கே.அழகுராமன், “கணக்கில் காட்டி அதுவும் கூடுத லான சம்பளம் வாங்குபவர்கள் ஐடி காரிடாரில் உள்ளவர்கள் என்பதால் அவர்களைக் குறிவைத்தே இந்த விளம்பரங்களை வெளியிடு கிறார்கள். இந்த விளம்பரங்கள் விஷயத்தில் இந்த சமயத்தில் அனைவருமே விழிப்போடு இருக்க வேண்டும்.

வில்லங்க சான்றிதழ்

விளம்பரத்தில் உள்ள சொத்தை நீங்கள் வாங்க நினைத்தால் அதன் உரிமையாளரிடம் சொத்து சம்பந் தப்பட்ட ஆவண தொகுப்புகள் அடங்கிய சிடி-யை கேட்டுப் பெற லாம். அல்லது ஆவணங்களின் நகல்களை பெற்று அதற்கு வழக் கறிஞர் ஒருவரிடம் லீகல் ஒப்பீனியன் பெற்ற பின்பு கிரய ஒப்பந்தம் போடலாம்.

அடிப்படை ஆவணங்களை பெறுவதற்கே யாராவது முன்பணம் கேட்டால் அந்த சொத்தை வாங்கும் எண்ணத்தையே விட்டுவிடுவது நல்லது. ஆன் லைன் வியாபாரங்களில் சொத் தின் உரிமையாளரை நேரடியாக சந்திக்க விடாமல், விளம்பரப் படுத்திய நபரோ, நிறுவனமோ இடைத்தரகர்களாக செயல்படு வதும் உண்டு. எனவே, சொத்துக்கு உரியவரை தொடர்புகொண்டு அவர் அந்த சொத்தை விற்கும் முடிவில் இருக்கிறாரா? அவருக்கு அதற்கு முழு அதிகாரம் உள் ளதா? என்ற விவரங்களை தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள்.

லீகல் ஒப்பீனியன், வில்லங்க சான்றிதழ் இவைகள் இலவசம் என்பதெல்லாம் ஏமாற்று வேலை. அரசின் பதிவுத் துறை இணையத்தில் எந்த சொத்துக்கும் வில்லங்க சான்றிதழை நாமே இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அவர்கள் விற்கும் சொத்துக்கு நமது வழக்கறிஞரிடம் லீகல் ஒப்பீனியன் பெறுவதே சரியாக இருக்குமே தவிர, சொத்தை விற்பவரே லீகல் ஒப்பீனியன் வாங்கித் தருகிறார் என்றால் வில்லங்கங்களை மறைக்க வாய்ப்பு இருக்கிறது.

உங்களுக்கு சொத்துகளை விற்பவர் அதற்கான வருமானத்தை கணக்கில் காட்டி தேவைப்பட்டால் வருமான வரியும் கட்டிவிட்டு பாதுகாப்பாகிவிடுவார். அவரிடம் சொத்து வாங்கியதற்கு பணம் எப்படி வந்தது? என்ற வருமான வரித் துறையின் கேள்வியை நீங்கள்தான் எதிர்கொள்ள வேண்டும்.

இப்போது சொத்து வாங்க நினைப்பவர்கள் இந்த அம்சங்கள் அனைத்தையும் யோசித்துப் பார்த்து செயல்பட வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x