Published : 26 Oct 2022 06:50 AM
Last Updated : 26 Oct 2022 06:50 AM

மாதவரம் - தரமணி மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை 2025-ம் ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டம்

சென்னை: மாதவரம் - தரமணி இடையே 21 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை 2025-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. மாதவரம் - சிறுசேரி சிப்காட் இடையே 45.8 கி.மீ.தொலைவுக்கும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் இடையே26.1 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே47 கி.மீ. தொலைவுக்கும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மொத்தம் 42.6 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை பணிகள் நடைபெறுகின்றன. இதில், அதிகபட்சமாக, மாதவரம் - சிறுசேரி சிப்காட் வழித்தடத்தில் 26.7 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில் மாதவரம் பால் பண்ணையில் சுரங்கம் தோண்டும் பணியை அண்மையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த தடத்தில், மாதவரம் - தரமணிஇடையே 21 கி.மீ. தொலைவுக்குபூமிக்கடியில் 82 அடி ஆழத்தில்82 அடி அகலத்தில் 2 சுரங்கப்பாதைகள் அமைக்கப்படுகின்றன.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், சுரங்கப்பாதை அமைப்பதற்காக மொத்தம் 23 சுரங்கம் துளையிடும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. முதல்கட்டமாக, 8 சுரங்கம் துளையிடும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு இயந்திரமும் தினசரி 33அடி வரை சுரங்கம் தோண்டும். மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை3-வது வழித்தடத்தில் மாதவரம் - தரமணி வரை 21 கி.மீ. தொலைவுக்கு இரு மார்க்கத்துக்கும் மெட்ரோசுரங்கப்பாதை அமைக்க உள்ளோம். சுரங்கம் துளையிடும் இயந்திரத்தின்பணி தொடங்கிய பிறகு, முடியும் வரையில் நிறுத்தப்படாது. இதை நிறுத்தினால், சுரங்கப்பாதை பணியில் பாதிப்பு ஏற்படும். இந்த சுரங்கப்பாதை பணியை வரும் 2025-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x